AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக போட்டியிடும் தொகுதிகள்… வெளியானது உத்தேச பட்டியல்!

NR Congress BJP Proposed Constituencies: புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ், பாஜக, லட்சிய ஜனநாயக கட்சிகள் போட்டியிட உள்ள உத்தேச தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் எந்தெந்த தொகுதிகளில் கட்சிகள் போட்டியிட உள்ளன என்பதை பார்க்கலாம்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக போட்டியிடும் தொகுதிகள்… வெளியானது உத்தேச பட்டியல்!
என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Mar 2026 07:06 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. தற்போதும், இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், என். ஆர். காங்கிரஸ்- பாஜக இடையே தொகுதி பங்கீடு மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைப்பது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை ஆகியவை தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. இது தொடர்பாக, என். ஆர். காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான என். ரங்கசாமியிடம் பாஜக தலைமை பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

என்.ஆர்.காங்கிரஸுக்கு 16- பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு  14

இதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா உறுதியளித்தார். இதில், ரங்கசாமிக்கு உடன்பாடு ஏற்பட்ட நிலையில், அந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு நேற்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 20 ) கையெழுத்தானது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.

மேலும் படிக்க: ராமதாஸ்-சசிகலா கூட்டணி உறுதியானது… தமிழகம்-புதுச்சேரியில் இணைந்து போட்டி!

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகள்

அதன்படி, என். ஆர். காங்கிரஸ் போட்டியிட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், இந்திரா நகர், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, அரியாங்குப்பம், திருபுவனை, மங்கலம், உழவர்கரை, வில்லியனூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம், காரைக்கால், நெடுங்காடு, காரைக்கால் தெற்கு, காரைக்கால் வடக்கு, ஏனாம், பாகூர் ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதே போல, பாஜக, மண்ணாடிபட்டு, காலாப்பட்டு, மணவெளி, ராஜ்பவன், ஊசுடு, உருளையன்பேட்டை, திருநள்ளாறு, முதலியார் பேட்டை, மாஹே, நிரவி திருப்பட்டினம் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

கடந்த தேர்தலில் எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன

இதேபோல, லட்சிய ஜனநாயக கட்சி காமராஜ் நகர், நெல்லித் தோப்பு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதிமுக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என். ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதை போல 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி கூடுதலாக சேர்த்து 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு கடந்த தேர்தலில் 5 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. லாட்டரி அதிபர் மகனின் லஜக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்… கை கொடுக்குமா? காலை வாருமா? கள நிலவரம் கூறுவதென்ன!

Follow Us