23ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. எங்கே தெரியுமா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “செயற்பாட்டு வரைவு” என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. வழக்கமாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையைப் போலவே, இந்த முறையும் எந்தவித இலவசங்களும் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, மார்ச் 21, 2026: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரவிருக்கும் மார்ச் 23ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அவரது பிரச்சாரம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரையில், தற்போது ஐந்து முனைப்போட்டி நிலவி வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் மற்றும் புதிதாக உருவாகியுள்ள சசிகலா–ராமதாஸ் கூட்டணி ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
இதில் பிரதானமாக அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த முறை யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகள்:
நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொண்டால், கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஒவ்வொரு தேர்தலையும் தனித்து சந்தித்து வருகிறது. மேலும், இந்தக் கட்சியில் 50 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதமே நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 234 தொகுதிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்… வேட்பாளர்களின் கவனத்துக்கு… சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. சென்னை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “செயற்பாட்டு வரைவு” என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. வழக்கமாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையைப் போலவே, இந்த முறையும் எந்தவித இலவசங்களும் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
23ஆம் தேதி திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்:
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாத காலமே மீதமுள்ளது. இதனால், வரவிருக்கும் மார்ச் 23ஆம் தேதி முதல் சீமான் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடங்கி, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.