AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!

Eps Latest Speech : திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். விருநகரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட போது, மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… எடப்பாடி கே.பழனிசாமி!
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 31 Mar 2026 17:33 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 31) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சிவகாசியில் பிரபலமாக நடைபெற்று வரும் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனையை மக்களவையில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தி தீர்வு காணப்பட்டது. காவேரி குண்டாறு திட்டத்தின் மூலமாக ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பப்பட்டு பசுமையான பகுதியாக மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். மீண்டும் காவிரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். இதற்கு தமிழக அரசு மூலம் ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை நானே நேரில் வந்து தொடங்கி வைத்தேன். ஆனால், திமுக அரசு முடக்கியுள்ளது.

அதிமுக ஆட்சியில் தான் 11 மருத்துவ கல்லூரிகள் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் மேம்பாடு செய்யப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவமனைகளை காலதாமதம் செய்து திமுக அரசு திறந்து உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. இது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் 1 மருத்துவமனை கூட கொண்டு வரப்படவில்லை. பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வி படிப்பதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

மேலும் படிக்க: P.Moorthy Tamil Nadu Election: மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை உரித்தாக்குவாரா பி.மூர்த்தி!

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் பொம்மை முதல்வர் ஆண்டு கொண்டிருக்கிறார். திமுக அரசுக்கு தனது குடும்பத்தினரை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லை. தமிழக மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார். தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்

தமிழகத்தில் போதை பொருட்கள் இல்லாத இடமே இல்லாத நிலை உள்ளது. பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் நமது எதிர்காலமாக விளங்கும் குழந்தைகளின் வாழ்வாதாரம் சீரழிந்து வருகிறது. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் 3 மாதத்தில் போதை பொருட்கள் முற்றிலுமாக அகற்றப்படும். ஆளும் திமுக கட்சிக்கு துணையாக இருப்பவர்களே கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: R.P.Udayakumar Tamil Nadu Election: திருமங்கலம் தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பாரா ஆர்.பி.உதயகுமார்!

Follow Us