Team India: இந்திய அணியில் மறுக்கப்படும் வாய்ப்பு.. தேர்வாளர்களை மறைமுகமாக சாடிய முகமது ஷமி!
Mohammed Shami: முகமது ஷமி பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு, ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். அதனுடன், முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற யூகங்களும் வெளிவருகின்றன.
ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் முடிந்த கையோடு பிசிசிஐ, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான (2027 ODI World Cup) இந்திய அணியை தயார் செய்யும் பணியில் களமிறங்கும். இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று வரும்போது, சமீப காலங்களில் பும்ராவின் பெயர் முதலிடத்திலும், முகமது ஷமியின் பெயர் 2வது இடத்திலும் உள்ளது. 2023 உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு பங்களிப்பு மிக முக்கியமானது. மேலும், 2025-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டிருந்தார். இருந்தபோதிலும், சமீப காலமாக, முகமது ஷமிக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ALSO READ: ஐபிஎல்லில் இதுவரை 3 போட்டிகளும் ஒரே மாதிரி.. வெறுப்படையும் கிரிக்கெட் ரசிகர்கள்..!
காயம் காரணமா..?
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகும், 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் முகமது ஷமி காயங்களால் அவதிப்பட்டார். இருப்பினும், உடல் தகுதியுடன் களத்திற்குத் திரும்பி, தனது உடற்தகுதியை நிரூபித்து, பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டார். இருப்பினும், அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணியின் தேர்வாளர்கள், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடர்களுக்கு ஷமியைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதற்கிடையில், முகமது ஷமி பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 67 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.




முகமது ஷமி பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு, ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். அதனுடன், அவர் ஓய்வு பெறுவார் என்ற யூகங்களும் வெளிவருகின்றன.
ஓய்வு குறித்து பேசிய முகமது ஷமி:
தனது ஓய்வு குறித்து ஒரு பாட்காஸ்டில் பேசிய முகமது ஷமி, ”நான் சோர்வடையும்போது ஓய்வு பெறுவேன். ஆனால் இப்போது அதைப் பற்றி நான் யோசிக்கக்கூட இல்லை. அதைப் பற்றி யோசிப்பதே உங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும். அப்படி நினைத்தால் நீங்கள் ஏற்கனவே சோர்வடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். மக்களுக்குச் சலிப்பு ஏற்படும்போதுதான் அவர்கள் சோர்வடைவார்கள். நான் காலையில் எழுந்திருக்கும்போது சலிப்பாக உணரும் நாளில் ஓய்வு பெறுவேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். ஆனால் நான் அப்படியும் இல்லை. நான் இந்த விளையாட்டை ரசித்து விளையாடுகிறேன்.
ஒரு பந்துவீச்சாளராக, நான் எனது சிறந்த பங்களிப்பை அளித்து, என் மீது வைக்கப்படும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன். மற்றபடி, என் விதியை என்னால் மாற்ற முடியாது. ஆனால் லக்னோ அணி என்னை நம்பியிருக்கும்போது, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சிப்பேன்” என்றார்.
ALSO READ: தோனியிடம் துளியும் பேசவில்லை.. ஷாக் கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் அதிர்ச்சி..!
அவர் மேலும் கூறியதாவது, ” ஐபிஎல் பற்றிப் பேசினால் , கடந்தகால சாதனைகளைப் பார்ப்போம். எனக்கு அருகில் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளராவது இருக்கிறாரா! நான் ஒரு டி20 பந்துவீச்சாளர் இல்லை என்றாலும், கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளின் சாதனைகளைப் பார்ப்போம். நான் சுமார் 130 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன். ஒரு பந்துவீச்சாளரிடமிருந்து இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஒருவேளை இதுவெல்லாம் அதிர்ஷ்டத்தின் காரணம் என்று நினைத்தால், நான் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பினார். தற்போது, முகமது ஷமி ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.