AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India Schedule: அடுத்த 12 மாதங்கள்.. இந்திய அணியின் உள்நாட்டு அட்டவணை இதுதான்.. பிசிசிஐ அறிவிப்பு!

India Cricket Schedule 2026: இந்திய அணியின் முதல் உள்நாட்டு தொடரானது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் தொடங்குகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27 முதல் 2026 அக்டோபர் 17 வரை நடைபெறும். அப்போது இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும்.

Team India Schedule: அடுத்த 12 மாதங்கள்.. இந்திய அணியின் உள்நாட்டு அட்டவணை இதுதான்.. பிசிசிஐ அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Mar 2026 18:05 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), அடுத்த ஒரு வருடத்திற்கான இந்திய அணியின் (Indian Cricket Team) சர்வதேச போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனுடன், அனைத்து உள்ளூர் தொடர்களுக்கான தேதிகளும் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த காலண்டர் ஆண்டில் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகளை இந்திய மண்ணில் எதிர்கொள்கிறது. இதன்போது, இந்திய அணி அடுத்த 12 மாதங்களில் 17 நகரங்களில் மொத்தமாக 22 உள்ளூர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அட்டவணை.. களமிறங்கும் கோலி, ரோஹித்!

இந்திய அணியின் உள்நாட்டு தொடர் யாருடன்..?


இந்திய அணியின் முதல் உள்நாட்டு தொடரானது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் தொடங்குகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27 முதல் 2026 அக்டோபர் 17 வரை நடைபெறும். அப்போது இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும். இதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய 2 மாதங்களுக்குப் பிறகு, இலங்கை அணி இந்தியாவிற்கு வருகை தந்து வருகின்ற 2026 டிசம்பர் 13 முதல் 27 வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

2027 ஜனவரி மாதத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2026 ஜனவரி 3 முதல் 9 வரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். ஆஸ்திரேலிய அணியும் 2026 ஜனவரி மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை தரும். இரு முன்னணி அணிகளுக்கும் இடையே 2026 ஜனவரி 21 முதல் 2026 பிப்ரவரி 27 வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.

இந்தியாவின் அட்டவணை (உள்நாட்டுத் தொடர்கள்)

  • வெஸ்ட் இண்டீஸ் இந்திய சுற்றுப்பயணம்: 2026 செப்டம்பர் 27 – 2026 அக்டோபர் 17 – 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள்
  • இலங்கையின் இந்திய சுற்றுப்பயணம்: 2026 டிசம்பர் 13-27 – 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள்
  • ஜிம்பாப்வேயின் இந்திய சுற்றுப்பயணம்: 2026 ஜனவரி 3-9 – 3 ஒருநாள் போட்டிகள்
  • ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம்: 2026 ஜனவரி 21 – 2026 பிப்ரவரி 27 – 5 டெஸ்ட் போட்டிகள்

வருகின்ற 2027ம் ஆண்டில் இந்தியா தனது சொந்த மண்ணில் ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட உள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

ALSO READ: சச்சினா? கோலியா? யார் சிறந்த வீரர்கள்..? டிவி9க்கு கங்குலி பிரத்யேக பேட்டி!

வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்குச் சற்று முன்பு, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, இந்திய அணி ஒரு டி20 தொடருக்காக அயர்லாந்துக்குச் செல்லும். அங்கிருந்து இங்கிலாந்துக்குப் புறப்பட்டு, அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும்.

Follow Us