AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடேங்கப்பா! தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்

Aadhav Arjuna Assets Revealed : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து விவரம் தற்போது வெளியாகி அனைவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அடேங்கப்பா! தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? வெளியான தகவல்
ஆதவ் அர்ஜூனா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 Mar 2026 14:44 PM IST

சென்னை, மார்ச் 31 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை மார்ச் 30, 2026 அன்று முதல் தாக்கல் செய்து வருகின்றனர். அப்போது அந்த வகையில் தங்கள் வேட்பு மனுவுடன் தங்களது சொத்து விவரங்களையும் பிராமண பத்திரமாக தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூரில் தனத வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அது இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

அந்த வகையில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜூனா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது தனது சொத்து விவரங்கள் மற்றும் வருமானம் உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன? அதன் விதிகள் கூறுவது என்ன?

ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின் படி, கடந்த 2024 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான அவரது ஆண்டு வருமானம் ரூ.11.10 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அவரது ஆண்டு வருமானம் ரூ.67.57 கோடி என்றும் அவரது மனைவி டெய்சியின் ஆண்டு வருமானம் ரூ.38 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் ரூ.180 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவியின் பெயரில் ரூ.162 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் பிரமாணப் பத்திரத்தின் படி, 2024–25 ஆம் ஆண்டிற்கான அவரது ஆண்டு வருமானம் ரூ.11.10 கோடியாகும். இதற்கு முன் 2020–21 ஆம் ஆண்டில் அவரது வருமானம் ரூ.5.89 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக ரூ.67.57 கோடி வருமானம் பெற்றுள்ளதாகவும், அவரது மனைவி டெய்சியின் வருமானம் ரூ.38 கோடி அளவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் ரூ.17.49 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.89 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

இதையும் படிக்க : 500 சவரன் நகை, சொகுசு கார்கள், ரூ. 1 கோடி வைரம்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தற்போது அவரிடம் கையிருப்பில் ரூ.1.69 கோடி இருப்பதாகவும், வங்கியில் ரூ.17.53 கோடி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டு பங்குகளில் ரூ.2.23 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்துள்ளதாகவும், ரூ.155 கோடி வரை கடன் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள உத்தண்டி மற்றும் போர்ட் கிளம் பகுதிகளில் ரூ.17.49 கோடி மதிப்பில் 2 அபார்ட்மெண்ட்களும், ரூ.20.50 மதிப்பில் 2 கார்கள், ரூ.1.12 லட்சம் மதிப்பில் ராயல் என்ஃபீல்டு பைக் மற்றும் ரூ.63 ஆயிரம் மதிப்பில் சைக்கிள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது மனைவி பெயரில் ரூ.37.45 கோடி மதிப்பில் மாமல்லபுரம் , செங்கல்பட்டு, கோவை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் மொத்தம் 57 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கோவை, சென்னை பகுதிகளில் ரூ.33.27 கோடி மதிப்பில் 5 வணிக வளாகங்களும் ரூ. 26 கோடி மதிப்பில் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அவரிடம் ரூ.2.29 கோடி மதப்பில் 1.691 கோடி கிலோ தங்கம், அவரது மனைவியிடம் ரூ.3.01 கோடி மதிப்பில் 2.25 கிலோ தங்கம், ரூ.60.27 லட்சம் மதிப்பில் வெள்ளி மற்றும் ரூ.3.16 கோடி மதிப்பில் வைரங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.88 கோடி மதிப்பில் வருமான வரி நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us