AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன? அதன் விதிகள் கூறுவது என்ன?

What Is Silence Period | இந்தியாவை பொருத்தவரை தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் அறிவிக்கப்பட்ட இடத்துக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன, அதன் விதிகள் கூறுவது என்ன?

வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன? அதன் விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Mar 2026 21:28 PM IST

தமிழகம் (Tamil Nadu) 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை (2026 Assembly Election) எதிர்நோக்கி காத்திருக்குகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. இந்த நிலையில், தேர்தலில் வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் (Silence Period) என்றால் என்ன, அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன?

இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரம் அமைதி நேரம் என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய சில விதிகள் உள்ளன.

பிரசாரத்திற்கு தடை

வழக்கமாக வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இந்த வகையில், இந்த அமைதி நேரத்தில் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் மேடை பேச்சுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அமைதி நேரத்தின் போது வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கலாம். அதிலும் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

இதையும் படிங்க : சட்டமன்ற தேர்தல்… ஒரே நேரத்தில் மு.க.ஸ்டாலின்-விஜய் வேட்பு மனு தாக்கல்!

ஒலிப்பெருக்கிகளுக்கு தடை

இந்த அமைதி நேரத்தின் போது கட்சிகள் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தவோ, வாகனங்களில் பிரசாரம் மேற்கொள்ளவோ அனுமதி இல்லை.

ஊடங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளுக்கு தடை

இந்த 48 மணி நேரத்தில் ஊடகங்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், கருத்துக்கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை.

தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்

வக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சியினர், பிரசாரக்காரர்கள் ஆகியோர் தேர்தல் நடைபெறும் இடத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியேற வேண்டும். இந்த அமைதி நேரத்தில் வேட்பாளர்கள் அந்த தொகுதியில் இருக்க கூடாது.

இதையும் படிங்க : K.R. Periyakaruppan Tamil Nadu Election: திருப்பத்தூரில் தோல்வியே கண்டிராத கே.ஆர்.பெரியகருப்பன்.. அமைச்சரவையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா!

மது விற்பனைக்கு தடை

அமைதி நேரம் அமலில் இருக்கும் இந்த 48 மணி நேரமும் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.

வாக்காளர்கள் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க இந்த சட்டம் அமலில் உள்ளது.

Follow Us