AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்?.. வெளியான முக்கிய தகவல்!

PM Modi To Conduct Election Campaign In Chennai | பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04, 2026 அன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடன் இணைந்து பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ள நிலையில், பிரதமர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்?.. வெளியான முக்கிய தகவல்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Mar 2026 11:42 AM IST

சென்னை, மார்ச் 30 : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 04, 2026 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி, என்டிஏ  வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ளும் தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என பல கட்சிகள் போட்டியிடுவதால் பலமுனை போட்டியாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

அதிமுக கூட்டணியில் தேர்தலில் களம் காண உள்ள பாஜக

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் களம் காண உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது. அதிமுக தனது இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இணைந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமரின் தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : சசிகலா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள்.. கேரளத்திலும் தடம் பதிக்கும் சின்னம்மா.. முழு விவரம் இதோ!

ஏன்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர்?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அதிமுக கூட்டணி ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஏப்ரல் 04, 2026 அன்று என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், ஏப்ரல் 2வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us