AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்.. ஒரு வாரம் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம்..

CM MK Stain Kodaikanal Trip: வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளதால், ஒரு வார காலத்திற்கு கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். குடும்பத்தினருடன் ஒரு வாரம் அங்கு தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்.. ஒரு வாரம் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Apr 2026 08:29 AM IST

சென்னை, ஏப்ரல் 25, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவர் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வந்தார். காலை ஒரு மாவட்டம், மாலை ஒரு மாவட்டம் என புயல் வேகத்தில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் இன்று கொடைக்கானல் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக தரப்பில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்.. தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கப்படும் – வருமான வரித்துறை..

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை:

ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதியான நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக வேட்பாளர்களுடன் திடீரென முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் எப்படி நடைபெற்றது, வரவிருக்கும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு ஒரு மைல்கல்லா?.. புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் உண்மைப் பின்னணி!

ஒரு வாரம் கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்:

இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளதால், ஒரு வார காலத்திற்கு கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். குடும்பத்தினருடன் ஒரு வாரம் அங்கு தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow Us