Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல்வரிடம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நலம் விசாரிப்பு !

Rajinikanth and Kamal Haasan Inquire About M.K. Stalin’s Health : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் லேசான தலைச்சுற்றல் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்ப்டடிருப்பதாகவும் அவர் நலமுமடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.

முதல்வரிடம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நலம் விசாரிப்பு !
மு.கஸ்டாலின் - ரஜினிகாந்த் - கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jul 2025 19:03 PM

சென்னை, ஜூலை 21 : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) ஜூலை 21, 2025 அன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பரிசோதனைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) தொலைபேசி வாயிலாக முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினின் உடல்நலன் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். உடல்நலத்தைப் பற்றி பொருட்படுத்தாமல், ஓய்வில்லாமல் உழைக்கும் அவர் தனது உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவர் பூரண நலம் பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க: அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜூலை 21, 2025 அன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.  அவரது மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் பங்கேற்கவிருந்தார். எனினும், தற்போது அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.