Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!

Minister Anbil Mahesh : தமிழகத்தில் விரைவில் இரண்டாம் நிலை ஆசிரியர் பணிகளுக்கான 2,340 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு மேலாக ஆசிரியர்கள் பணி நிரந்தம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுததி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பை அன்பில் மகேஷ் வெளியிட்டிருக்கிறார்.

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!
அன்பில் மகேஷ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Jul 2025 22:50 PM

சென்னை, ஜூலை 19 : தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது, விரைவில் இரண்டாம் நிலை ஆசிரியர் பணிகளுக்கான 2,340 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பலருக்கும் நிரந்தர பணி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். இதற்காக தொகுப்பூதியமாக ரூ.12,500 மாதந்தோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதியாக அளித்தது. ஆனால், அது தற்போது வரை திமுக நிறைவேற்றவில்லை.

இதனால், ரூ.12,500 சம்பளத்தில் பல ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை.  இதனால்,  கடந்த 10  நாட்களுக்கு மேலாக,  தமிழகம்  முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.   பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில்  ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் கைது செய்யப்பட்டு வருவது நடந்து வருகிறது. இதற்கு கண்டனங்களும் எழுந்துள்ளது.

Also Read : ஜூலை 23ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் ஆசிரியர்களை கைது செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியாகும். தமிழகத்தில் 2025 ஜூலை 24ஆம் தேதி 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இந்த ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Also Read : செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. என்ன காரணம்?

2011ஆம் ஆம் ஆண்டுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை இதுவே ஆகும். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்துள்ளோம். அதற்கு ஏற்ப கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு வரும்” என கூறினார். இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பலருக்கும் நிரந்தர பணி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.