Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் சம்பவத்தில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது – ஆதவ் அர்ஜுனா பேட்டி.

Aadhav Arjuna: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “ கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க திமுக முயற்சிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் சம்பவத்தில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது – ஆதவ் அர்ஜுனா பேட்டி.
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 13 Oct 2025 13:47 PM IST

டெல்லி, அக்டோபர் 13, 2025: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி உள்ளது எனடெல்லியில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செப்டம்பர் 27 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்த பின்னர் அங்கு பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்த குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்தனர் அதே வேளையில் அக்டோபர் 13 2025 தேதி யான இன்று உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது இந்த விசாரணையானது ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரோஸ் தொகி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தவெகவை முடக்கும் பணியில் திமுக – ஆதவ் அர்ஜுனா:


இதனைத் தொடர்ந்து டெல்லியில் தமிழக வெற்றிக்கழக ஆதவ் அர்ஜுனா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அப்போது பேசிய அவர், “ காவல்துறை கூறிய இடத்தில்தான் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் காவல் துறையினர்தான் எங்களை வரவேற்றனர். வேறு எங்கும் வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் அடித்து அனுப்பினர்.

தவெகவை முடக்க திமுக முயற்சித்தது. காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்தார். ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக செய்வதை நாங்கள் உணர்ந்தோம். தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என அரசு திட்டமிட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி உள்ளது.

மேலும் படிக்க: கரூர் சம்பவ விசாரணையை கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகி.. யார் தெரியுமா?

காவல் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் வெளியே சென்றோம்:

கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஒருநபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டி அளித்தனர். விஜயின் தலைமைப் பண்பு உள்ளிட்டவை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது அதிர்ச்சியளித்தது.

மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தவெக தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் அக்டோர் 1ம் தேதி டெல்லிக்கு வந்தேன். நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுத்து அவர்களோடு இணைந்து பயணித்து உண்மையை கொண்டு வருவோம். 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். தவெக மற்றும் விஜயை குற்றவாளி ஆக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தவெக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்கு தவறு என உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக்கியுள்ளது. எங்கள் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு சரியான உத்தரவு வந்துள்ளது. தவெக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு தவெகவை முடக்க நினைக்கிறார்கள் என எங்களுக்கு தெரியும” என பேசியுள்ளார்.