Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்?

Tamil Nadu Weather Update: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வரக்கூடிய நாட்களில் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 06 Jan 2026 13:18 PM IST

வானிலை நிலவரம், ஜனவரி 6, 2026: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேற்கு–வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரக்கூடிய நாட்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்…மூடப்பட்ட ரயில்வே கேட்…அடுத்து நடந்தது என்ன!

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:

வழக்கமாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை மட்டுமே இருக்கும். ஆனால், கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வரக்கூடிய நாட்களில் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எங்கே ஆரஞ்சு அலர்ட்?

அந்த வகையில், ஜனவரி 9, 2026 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!

அதேபோல், ஜனவரி 10, 2026 அன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 11, 2026 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கொள்ளிடம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிதான ஒரு நிகழ்வு – வானிலை ஆய்வு மையம்:

தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், தற்போது வரக்கூடிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடித்து இருக்கும். 2025 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 அன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் இறுதி வரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு அளவிலான ஏற்றத் தாழ்வுகளுடன் வடகிழக்கு பருவமழை பதிவானது. இந்தச் சூழலில், வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து, தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இது அரிதான ஒரு நிகழ்வு என வானிலை ஆய்வு மையம் தரப்பு தெரிவித்துள்ளது.