நெஞ்சை உறைய வைத்த கொலை முயற்சி.. இதற்கு மேல் சட்டம் – ஒழுங்கு சீர்கெட முடியாது.. கொதித்த இபிஎஸ்..
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல - தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
கடலூர், ஜனவரி 30: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக மருமகளே, மாமனாரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த அந்த நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தீ பற்றி எரிந்த நிலையில், அவர் உயிருக்கு போராடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதறச் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை விமர்சித்து வருகின்றன.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
நெஞ்சை உறைய வைத்த சம்பவம்:
அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளருரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கான சாட்சி:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
உடல்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 30, 2026
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். “இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க: புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.5.5 கோடி சுருட்டிய மர்ம நபர்…ஒரே லிங்குதான் எல்லாம் போச்சு!
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு தீயில் எரிந்தது:
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல – தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.