Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜான்சேனாவாக மாறிய விராட் கோலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிசிசிஐ சார்பில் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கு வீரர்களுக்கு அவர்கள் பெயர் பதிக்கப்பட்ட வைர மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதனை அணிந்துக் கொண்டு WWE வீரர் ஜான்சேனா போல முகத்திற்கு நேராக கைகளை கொண்டு வந்து சைகை காட்டும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஜான்சேனாவாக மாறிய விராட் கோலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
விராட் கோலி - ஜான்சேனாImage Source: Instagram
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Apr 2025 10:33 AM

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி (Virat Kohli) பிரபல மல்யுத்த வீரர் ஜான்சேனா (John Cena) போல செய்து காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கு வீரர்களுக்கு அவர்கள் பெயர் பதிக்கப்பட்ட வைர மோதிரம் பிசிசிஐ சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தனது கைகளில் மாட்டிக் கொண்ட விராட் கோலி, WWE வீரர் ஜான்சேனா போல முகத்திற்கு நேராக கைகளை கொண்டு வந்து சைகை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீரர்களில் ஓய்வறையில் அவர் டான்ஸ் ஆடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான நிலையில் பலரும் ஜான்சேனாவை டேக் செய்து பதிவுகளை பகிர தொடங்கினர்.

இந்த வீடியோவானது கடந்த 2025, மார்ச் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்டது. இதனையடுத்து ஜான் சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி தன்னைப் போல செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

“His Time is N̶o̶w̶ Forever” 😎🖐

Virat Kohli is THE vibe! 😆❤️

🎧: John Cena (My Time is Now) pic.twitter.com/69uXWrPtcE

— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 6, 2025

 

ஜான்சேனா பதிவிட்ட போஸ்ட்

 

View this post on Instagram

 

A post shared by John Cena (@johncena)

ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.  இதேபோல் தற்போது வரை அவர் 3 போட்டிகளில் விளையாடி 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். தொடர்ந்து பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் விராட் கோலி திணறி வந்தாலும் ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

டி20 போட்டிகளின் விவரம்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த தொடரிலும் விராட் கோலி பெரிதாக ரன் குவிக்கவில்லை. ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான இறுதி ஆட்டத்தில் அவர் 76 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதுவரை 125 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 4,188 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்கள் அடித்துள்ள அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார். கிட்டதட்ட 18 ஆண்டாக விராட் கோலி விளையாடி வந்தாலும் பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை.

இம்முறை எப்படியாவது விராட் கோலிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று பரிசளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த அணியும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.