IPL 2026 : சிஎஸ்கேவுக்கு அச்சுறுத்தலாக காத்திருக்கும் வைபவ் – அவரது இன்ஸ்பிரேஷன் இவர்கள் தானாம்
Sooryavanshi IPL 2026 Target: ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனிலும் பெரிய ஸ்கோர்களை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் வைபவ் சூர்யவன்ஷி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் அவரது வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது 14 வயதிலேயே அறிமுகமான அவர், ஐபிஎல் வரலாற்றில் மிக இள வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்தார். தனது முதல் போட்டியிலேயே 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளம் வீரர் அடித்த முதல் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவுக்கு அச்சுறுத்தலாக காத்திருக்கும் வைபவ்
மேலும் லோக்கல் கிரிக்கெட்டிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்திருந்தார். அதே போல செய்யத் முஸ்தக் அளி டிராபியில் சதம் அடித்து அசத்தினார். மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் 690 ரன்கள் எடுத்து, 160க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டுடன் பெற்று மிரட்டினார்.
இதையும் படிக்க : MS Dhoni: மீட்டிங் தவிர்ப்பு.. அணியுடன் பயணம் இல்லை.. ஐபிஎல் 2026ல் இருந்து விலகுகிறாரா தோனி?




மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்கு 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்து இந்திய அணி பட்டம் வெல்ல காரணமாக அமைந்தார். அந்த போட்டியில் 15 பவுண்டரிகளும், 15 சிக்சர்களும் அடித்த அவர் முழு தொடரிலும் 30 சிக்சர்கள் அடித்த அவர், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார். இதனால் ஐபிஎல் 2026 போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வைபவின் இன்ஸ்பிரேஷன் இவர்கள் தான்
இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி பிரயன் லாரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷனாக குறிப்பிடுகிறார். அதற்கு காரணம் அவர்கள் ஒருவராகவே போட்டியை முடிக்கும் திறன் பெற்றவர்கள் அன்று அது தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் 2026 போட்டியில் தனது இலக்கு குறித்து கூறிய அவர் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து நீண்ட இன்னிங்க்ஸ் ஆட வேண்டும் என்பதே தனது இலக்கு என்றார்.
இதையும் படிக்க : IPL 2026: ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வா? கடைசி போட்டியை எங்கு, யாருடன் விளையாடுவார்?
மொத்தத்தில் வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள அவர், ஐபிஎல் 2026 சீசனில் முழு திறனையும் வெளிப்படுத்த காத்திருக்கிறார். குறிப்பாக சிஎஸ்கேவுக்கு எதிராக இன்றைய போட்டியில் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.