AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தோனி இல்லாத சிஎஸ்கே.. விக்கெட் கீப்பராக சஞ்சு? சிஎஸ்கே பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

MS Dhoni's Replacement: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் தானும், சஞ்சுவும் தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்குவோம் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தனர். மேலும், சிஎஸ்கே பயிற்சி போட்டியில் ஆயுஷ் மத்ரே 3வது இடத்தில் பேட்டிங் செய்ததால், அவர் போட்டிகளிலும் அதே இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: தோனி இல்லாத சிஎஸ்கே.. விக்கெட் கீப்பராக சஞ்சு? சிஎஸ்கே பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
சஞ்சு சாம்சன்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Mar 2026 16:06 PM IST

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு சற்று முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி, அடுத்த முதல் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தநிலையில், சென்னை அணியின் முதல் 3 அல்லது 4 போட்டிகளை எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) தவறவிடக்கூடும். இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்று கேள்வி எழுந்தது. ஏனெனில், தற்போது சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன், உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா உள்ளிட்ட 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதன்படி, சென்னை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக யாரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நியமிப்பார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இரண்டு வாரங்களுக்கு தோனியால் விளையாட முடியாது – சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்

சஞ்சு சாம்சன் முதல் தேர்வு:

எம்.எஸ்.தோனி காயம் ஏற்பட்டிருக்காவிட்டால், சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இடம்பெற்று விக்கெட் கீப்பிங் செய்திருப்பார் என்பது உறுதி. இந்த சூழ்நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு பேட்ஸ்மேனாக விளையாடி இருப்பார். இப்போது, தோனிக்கு காயம் என்பதால் சூழ்நிலைகள் முழுவதும் மாறிவிட்டன. அதன்படி, சிஎஸ்கே அணி நிர்வாகம் விக்கெட் கீப்பங் பிரிவுக்கு சஞ்சு சாம்சன் மீது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி சில போட்டிகளில் விளையாட முடியாத நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் நிகழலாம்.

யார் தொடக்க வீரர்கள்..?

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் தானும், சஞ்சுவும் தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்குவோம் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தனர். மேலும், சிஎஸ்கே பயிற்சி போட்டியில் ஆயுஷ் மத்ரே 3வது இடத்தில் பேட்டிங் செய்ததால், அவர் போட்டிகளிலும் அதே இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து, டிவால்ட் பிராவிஸ் 4வது இடத்திலும், ஷிவம் துபே 5வது இடத்தில் களமிறங்கலாம்.

ஐபிஎல் மினி ஏலத்தில் தலா ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் முறையே 6வது மற்றும் 7வது இடத்தில் விளையாடலாம். பிரசாந்த் வீர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் பங்களிப்பை தருவார். தொடர்ச்சியாக வேகப்பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் 8வது இடத்திலும், நூர் அகமது, மேட் ஹென்றி மற்றும் கலீல் அகமது ஆகியோர் முறையே 11 வரை இறங்கலாம். இம்பேக்ட் வீரர் என்று வரும்போது அன்ஷூல் கம்போஜ் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரில் யாரேனும் இறங்கலாம்.

ALSO READ: 14 லீக் போட்டிகள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே எப்போது, யாருடன் மோதுகிறது?

தோனி இல்லாமல் கணிக்கப்பட்ட சிஎஸ்கே பிளேயிங் லெவன்:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, டெவால்ட் பிராவிஸ், கார்த்திம் சர்மா, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மேட் ஹென்றி, கலீல் அகமது

இம்பாக்ட் வீரர் அன்ஷூல் கம்போஜ் அல்லது ஸ்பென்சர் ஜான்சன்

Follow Us