AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

MS Dhoni: மீட்டிங் தவிர்ப்பு.. அணியுடன் பயணம் இல்லை.. ஐபிஎல் 2026ல் இருந்து விலகுகிறாரா தோனி?

Chennai Super Kings: சில நாட்களுக்கு முன்பு, வலைப்பயிற்சியின் போது தோனி நொண்டியபடி செல்லும் காணொளி ஒன்று வெளியானது. இது அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்பதை உணர்த்தியது. இருப்பினும், தோனி இல்லாததால் சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. சஞ்சு சாம்சன் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகக் கருதப்படுகிறார்.

MS Dhoni: மீட்டிங் தவிர்ப்பு.. அணியுடன் பயணம் இல்லை.. ஐபிஎல் 2026ல் இருந்து விலகுகிறாரா தோனி?
மகேந்திர சிங் தோனிImage Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Mar 2026 18:37 PM IST

ஐபிஎல் சீசனில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) களமிறங்கினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆரவாரம் செய்து வரவேற்பார்கள். ஆனால், கடந்த சில தினங்களாகவே சிஎஸ்கே அணிக்கு தோனியின் பங்களிப்பு குறைவாகவே இருந்துள்ளது. தற்போது, ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு சற்று முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பெரும் பின்னடைவை சந்தித்தது. காயம் காரணமாக 44 வயதான எம்.எஸ்.தோனி, ஐபிஎல் 2026 சீசனின் முதல் 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்திருந்தது. இருப்பினும், தோனி ஐபிஎல் 2026 சீசனில் இருந்து முழுதாக விலகலாம் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

ALSO READ: 3 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் இணைய விரும்பிய சாம்சன்.. ருதுராஜ் கெய்க்வாட் சுவாரஸ்ய தகவல்!

அணி மீட்டிங்கிலும் பங்கேற்காத தோனி:

சூப்பர் கிங்ஸ் சார்பில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “மஹி பாய் இப்போது அணி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் கூட கலந்துகொள்வதில்லை. அவர் என்னிடம், “நீ என் ஆலோசனையைக் கேட்டாலும், அதை நீ கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை,” என்று கூறினார். அதன்படி, மகேந்திர சிங் தோனி முழுமையாகவே ஒதுங்கிக்கொண்டுவிட்டார் என்பது தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை அதாவது 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தனது தொடக்க போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டிக்காக தோனி, சிஎஸ்கே அணியுடன் பயணிக்கவில்லை என்றும், தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் சிஎஸ்கே முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

முழங்கால் பிரச்சனையால் அவதிப்படும் தோனி:

கடந்த சில சீசன்களாகவே எம்.எஸ்.தோனி முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், கடந்த 2023 ஐபிஎல் சீசனுக்கு பிறகு தோனி அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால், அவரால் நீண்ட நேரம் பேட் செய்ய முடியாததாலும், முன்பு போல் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக, தோனி கடந்த ஐபிஎல் 2025 சீசனில் 7 அல்லது 8வது இடத்திலேயே பேட்டிங் செய்தார்.

ALSO READ: KKRக்கு எதிராக பும்ரா விளையாடுவாரா? பயிற்சியாளர் ஜெயவர்தனே முக்கிய தகவல்! 

சில நாட்களுக்கு முன்பு, வலைப்பயிற்சியின் போது தோனி நொண்டியபடி செல்லும் காணொளி ஒன்று வெளியானது. இது அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்பதை உணர்த்தியது. இருப்பினும், தோனி இல்லாததால் சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. சஞ்சு சாம்சன் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகக் கருதப்படுகிறார். கீழ் வரிசையில், பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா போன்ற வீரர்கள் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தக்கூடும். தோனியின் உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு, அவரால் நீண்ட நேரம் பேட் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்ய இயலாத நிலையில் இருப்பதால், ஐபிஎல் 2026 சீசனில் இருந்து முழுவதும் விலகலாம். அப்படி இல்லையெனில், விரைவில் ஓய்வை அறிவித்து, சிஎஸ்கே அணி வீரர்களுக்கு வழிகாட்டியாக செயல்படலாம்.

Follow Us