IND vs NZ Final: 4வது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா.. இதுவரை இந்திய அணி சாதித்தது என்ன?

T20 World Cup Finals Record: இந்திய அணி கோப்பையை வென்றால் கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்த முதல் அணியாகவும், சொந்த மண்ணில் அதை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறும். இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி இருந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

IND vs NZ Final: 4வது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா.. இதுவரை இந்திய அணி சாதித்தது என்ன?

இந்திய அணி

Published: 

08 Mar 2026 16:43 PM

 IST

கடந்த 2026 மார்ச் 5ம் தேதி அரையிறுதியில் இந்திய அணி (Indian Cricket Team) இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வரலாற்றில் 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி இந்திய அணி தொடர்ச்சியாக 2வது முறையும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். இந்திய அணி கோப்பையை வென்றால் கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்த முதல் அணியாகவும், சொந்த மண்ணில் அதை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறும். இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி இருந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள்.. ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!

பைனல் வரலாறு:

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை 3 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி 2ல் வெற்றியையும், 1ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

2007 பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி (ஜோகன்னஸ்பர்க்)

2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது கவுதம் கம்பீர் 75 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தூக்கியது. இந்திய அணிக்காக இர்பான் பதான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2014 இலங்கை அணிக்கு எதிரான தோல்வி (டாக்கா)

2014 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 77 ரன்கள் எடுத்திருந்தார்.

இலக்கை துரத்திய இலங்கை அணி வெறும் 17.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது.

2024 தென்னாப்பிரிக்கா எதிரான வெற்றி (பார்படோஸ்)

கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு மேலான ஐசிசி கோப்பைக்கான கனவை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. 2024 டி20 உலகக் கோப்பையிலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2வது முறையாக கோப்பையை தனதாக்கியது.

ALSO READ: இன்னும் ஒரு ரன் போதும்! எம்.எஸ்.தோனி சாதனை பட்டியலில் இணையும் சஞ்சு சாம்சன்..!

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை இறுதிச் சாதனை

  • 2007 vs பாகிஸ்தான் (ஜோகன்னஸ்பர்க்): இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 2014 vs இலங்கை (டாக்கா): இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 2024 vs தென்னாப்பிரிக்கா (பார்படாஸ்): இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு