WI vs SOC: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக்.. ஸ்காட்லாந்தை மிரட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட்!

Romario Shepherd Hattrick: வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இது சர்வதேச டி20 போட்டிகளில் ஷெப்பர்டின் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன்பு ரொமாரியோ ஷெப்பர்ட் வங்கதேசத்திற்கு எதிராக ஹாட்ரிக் எடுத்திருந்தார்.

WI vs SOC: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக்.. ஸ்காட்லாந்தை மிரட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட்!

ரொமாரியோ ஷெப்பர்ட்

Published: 

07 Feb 2026 19:36 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) முதல் நாளில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளட் ரொமாரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) ஹாட்ரிக் எடுத்தார். இதன்மூலம், 2026 டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரொமாரியோ ஷெப்பர்ட் படைத்தார். இதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இது சர்வதேச டி20 போட்டிகளில் ஷெப்பர்டின் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன்பு ரொமாரியோ ஷெப்பர்ட் வங்கதேசத்திற்கு எதிராக ஹாட்ரிக் எடுத்திருந்தார்.

ஒரே போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகள்:


கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹாட்ரிக் எடுத்தது மட்டுமல்லாமல், மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். 17வது ஓவரில் மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஆலிவர் டேவிட்சன் ஆகியோரை தொடர்ச்சியாக 3 பந்துகளில் வீழ்த்தி ரொமாரியோ ஷெப்பர்ட் 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியும் அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் வெற்றி:

2026 டி20 உலகக் கோப்பையின் 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் அணிக்காக அற்புதமாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 64 ரன்கள் எடுத்தார். மேலும், பவல் மற்றும் ரூதர்ஃபோர்டு முறையே 24 மற்றும் 26 ரன்கள் எடுத்திருந்தனர்.

183 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து, ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, ஸ்காட்லாந்து சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 17வது ஓவரை வீச ரோமாரியோ ஷெப்பர்ட் வந்தார். இரண்டாவது பந்தில் மேத்யூ கிராஸை (11), மூன்றாவது பந்தில் மைக்கேல் லீஸ்கை (0) மற்றும் நான்காவது பந்தில் ஆலிவர் டேவிட்சன் (0) ஆகியோரை வெளியேற்றி தனது ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார். உலகின் 9வது பந்து வீச்சாளர் மற்றும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்