AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: இல்லாத அதிர்ஷ்டம்! ஐபிஎல்லில் இதுவரை எந்த அணிகள் கோப்பையை வெல்லவில்லை!

3 Teams Never Won IPL Trophy: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை. இந்த மூன்று அணிகளைப் போலவே,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடந்த 17 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாக போராடியது. இருப்பினும், கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபியின் கனவு 18வது சீசனில் நனவானது.

IPL 2026: இல்லாத அதிர்ஷ்டம்! ஐபிஎல்லில் இதுவரை எந்த அணிகள் கோப்பையை வெல்லவில்லை!
ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணிகள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Mar 2026 18:59 PM IST

ஐபிஎல்-ன் 19வது சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த 19-வது சீசனுக்காக பங்கேற்கும் 10 அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. ஒருபுறம், இந்த இரண்டு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன என்றாலும், கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் சாம்பியன் ஆவதற்காகக் காத்திருக்கும் சில அணிகளும் உள்ளன. எனவே, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த 3 அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

எந்த 3 அணிகள்..?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை. இந்த மூன்று அணிகளைப் போலவே,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடந்த 17 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாக போராடியது. இருப்பினும், கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபியின் கனவு 18வது சீசனில் நனவானது. ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது 18 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. எனவே, இந்த மூன்று அணிகளில் எந்த அணி ஆர்சிபியைப் போல ஐபிஎல் கோப்பைக்கான காத்திருப்பை இந்த 2026 சீசனில் முடிவுக்கு கொண்டு வரும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத்:

லக்னோ 2022-ல் அறிமுகமானது. அதன்படி, இது லக்னோவின் ஐந்தாவது ஆண்டாகும். லக்னோவைப் போலவே, குஜராத்தும் 2022-ல் ஐபிஎல்-இல் நுழைந்தது. இருப்பினும், குஜராத் தனது முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றது. லக்னோ, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காகக் காத்திருக்கின்றன.

மாறிய அணியின் பெயர், மாறாத தலைவிதி:

பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளும் ஐபிஎல்-இன் முதல் சீசனிலிருந்தே விளையாடி வருகின்றன. டெல்லியும் பஞ்சாபும் தங்கள் பெயர்களை மாற்றியுள்ளன. பெயரை மாற்றுவதால் ஏதேனும் அற்புதம் நிகழுமா என்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் சோதனை செய்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸின் முந்தைய பெயர் டெல்லி டேர்டெவில்ஸ். பஞ்சாப் கிங்ஸ் முன்பு கிங்ஸ் XI பஞ்சாப் என்று அழைக்கப்பட்டது.

ALSO READ: இம்பாக்ட் பிளேயர் விதி வேண்டாம்.. பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன்கள் கோரிக்கை!

பைனலில் பஞ்சாப் 2 முறையும், டெல்லி 1 முறையும்:

ஐபிஎல்லில் சாம்பியன் ஆக வேண்டும் என்ற பஞ்சாபின் கனவு இரண்டு முறையும், டெல்லியின் கனவு ஒரு முறையும் தகர்க்கப்பட்டுள்ளது . கிங்ஸ் XI பஞ்சாப் 2014-லும், பஞ்சாப் கிங்ஸ் 2025-லும் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. மறுபுறம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 2020-ல் ஐபிஎல்லில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

Follow Us