T20 World Cup 2026: பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
India vs Pakistan Match: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன. இரண்டும் குரூப் ஏ-வில் உள்ளன. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை தோற்கடித்தது அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராகவும் வெற்றி பெற்றது.

இந்தியா Vs பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியாவுடனான போட்டியில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. கடந்த 2026ம் ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடனான லீக் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடாது என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஐசிசி நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாகிஸ்தான் இந்தியாவுடன் (India – Pakistan) விளையாட சம்மதம் தெரிவித்தது. இருப்பினும், பாகிஸ்தான் வைத்த 3 நிபந்தனைகளை ஐசிசி ஏற்க மறுத்துவிட்டது. இறுதியில், பாகிஸ்தான் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இந்தநிலையில், இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது உறுதியான நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டி எப்போது, எங்கு நடைபெறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன. இரண்டும் குரூப் ஏ-வில் உள்ளன. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை தோற்கடித்தது அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 2வது போட்டி இன்று அதாவது 2026 பிப்ரவரி 10ம் தேதி அமெரிக்காவுக்கு எதிராகவும், இந்தியாவின் 2வது போட்டி 2026 பிப்ரவரி 12ம் தேதி நமீபியாவுக்கு எதிராகவும் நடைபெறும். அதேநேரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் 3வது போட்டியில் நேருக்கு நேர் வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி சந்திக்கின்றனர்.
ALSO READ: முடிவுக்கு வந்த பஞ்சாயத்து.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி உறுதி.. முழு விவரம்!
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும்?
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி 2026 டி20 உலகக் கோப்பையின் 27வது போட்டியாகும். இந்தப் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறும்?
இரு நாடுகளும் ஐ.சி.சி போட்டிகளில் ஒருவருக்கொருவர் விளையாட அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால்தான் இலங்கை இந்தியாவுடன் இணைந்து போட்டியை நடத்தும் என்பதால், இந்தியா vs பாகிஸ்தான் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
போட்டியின் நேரம் என்ன?
2026 பிப்ரவரி 15ம் தேதி மொத்தம் 3 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும். இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இலங்கை நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் இலங்கை நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை எந்த சேனல் நேரடியாக ஒளிபரப்பும்?
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் இருக்கும்.
ALSO READ: மத்திய ஒப்பந்தங்களில் பெரிய மாற்றங்கள்! பின் தங்கிய ரோஹித், விராட்.. ஆதிக்கத்தில் சுப்மன் கில்!
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எங்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்?
இந்தியா vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.