AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சுப்மன் கில் இல்லை.. குஜராத்தின் கேப்டன் யார்..? முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்

GT vs RR Toss Update: ஐபிஎல் 2026 சீசனின் 9வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 4ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

IPL 2026: சுப்மன் கில் இல்லை.. குஜராத்தின் கேப்டன் யார்..? முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்
Gt Vs Rr Captains
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 Apr 2026 19:48 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 9வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 4ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவாக, கேப்டன் சுப்மன் கில் விளையாடவில்லை. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் தலைமை தாங்குகிறார்.

ALSO READ: அக்சருக்கு எதிராக அடுத்தடுத்து அவுட்.. கோபத்தில் கிளம்பிய ரோஹித் சர்மா!

சுப்மன் கில் விளையாடததற்கான காரணம்:

டாஸ் போடும்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷித் கான் தற்காலிக கேப்டனாகக் களமிறங்கியபோது, ​சுப்மன் கில் விளையாடாதது குறித்து திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவே நிர்வாகத்தை இந்த முடிவை எடுக்க நிர்பந்தித்தது என்று உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். கில்லுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது, அவர் விரைவில் திரும்புவார் என நம்புகிறோம்” என்று டாஸின் போது ரஷித் கான் தெரிவித்தார்.

கிடைத்த தகவலின்படி, சுப்மன் கில்லின் தசைப்பிடிப்பின் தீவிரம் குறித்து இதுவரை கூறப்படவில்லை என்றாலும், ரஷீத் கான் தெரிவித்த தகவலின்படி, அந்தக் காயம் ஒரு சிறிய காயமாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 39 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் இல்லாதது, சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் மீது தொடக்க ஆட்டக்காரர்களாக கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். குஜராத் டைட்டன்ஸ் அணி 2026 சீசனில் தங்களின் முதல் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதற்கு தடை போடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

குமார் குஷாக்ரா, சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாடியா, ரஷித் கான்(கேப்டன்), ககிசோ ரபாடா, அசோக் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ALSO READ: ரிஸ்வியின் ருத்ரதாண்டவம்.. மும்பையை ஓடவிட்ட டெல்லி கேபிடல்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக்(கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், டோனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

 

Follow Us