AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சமீர் ரிஸ்வியிடம் ஆரஞ்சு கேப்.. ரவி பிஷ்னோயிடம் பர்ப்பிள் கேப்.. முழு லிஸ்ட்!

IPL 2026 Orange Cap Purple Cap List: பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் 2025-ல் பர்ப்பிள் கேப்பை வென்றார். இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கிருஷ்ணா, மீண்டும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைத்த ரவி பிஷ்னோய், தற்போது 5 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

IPL 2026: சமீர் ரிஸ்வியிடம் ஆரஞ்சு கேப்.. ரவி பிஷ்னோயிடம் பர்ப்பிள் கேப்.. முழு லிஸ்ட்!
சமீர் ரிஸ்வி - ரவி பிஷ்னோய்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Apr 2026 14:53 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இதுவரை 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 9 போட்டிகளில்  பெரும்பாலானவை அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகளாகவே இருந்துள்ளன. ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கப்படவில்லை என்றாலும், இந்த சீசன் ஓரளவிற்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. மறுபுறம், பந்துவீச்சாளர்களும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த சீசனின் பர்ப்பிள் கேப் வென்ற பிரசித் கிருஷ்ணா தனது சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து வருகிறார். அதேநேரத்தில், சமீர் ரிஸ்வி (Sameer Rizvi) மற்றும் ஆயுஷ் மத்ரே போன்ற இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதன்படி, ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வெற்றியாளர்களை இப்போதே கணிப்பது கடினமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு போட்டிக்கும் நடுவே ஒரு வீரரிடம் இருந்த ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வேறு வீரர்களுக்கு மாறுகிறது. அந்தவகையில், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வைத்துள்ள வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தொடரும் சோகம்.. கடைசி இடத்தில் சிஎஸ்கே.. ஐபிஎல் லேட்டஸ்ட் புள்ளி அட்டவணை இதுதான்!

ஆரஞ்சு கேப் தற்போது யாரிடம் உள்ளது..?

ஆரஞ்சு கேப்பை தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி வைத்திருக்கிறார். ரிஸ்வி இரண்டு போட்டிகளில் 2 அரைசதங்கள் உள்பட 160 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, ஆரஞ்சு கேப்க்கான ஒரு வலுவான போட்டியாளர் என்பது தெளிவாகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, ஒரு அரைசதம் உட்பட 113 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் கடந்த காலங்களில் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார், மேலும் இந்த வேகத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், முதல் முறையாக ஆரஞ்சு கேப்பை வெல்லும் சாதனையை ரோஹித் சர்மாவால் நிச்சயமாக படைக்க முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 21 வயது பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷி, 2 போட்டிகளிலும் அரைசதங்கள் அடித்து 103 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் 22 வயதான கூப்பர் கானலி, 108 ரன்கள் எடுத்துள்ளார். ஆரஞ்சு கேப்க்கான போட்டியில் வேறு பல பெயர்களும் இருப்பதாகத் தெரிகிறது. இஷான் கிஷன், ஆயுஷ் மத்ரே, துருவ் ஜூரல் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரும் ரன்கள் குவித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை 94 ரன்கள் எடுத்துள்ள இஷான் கிஷன், தற்போது ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் 5-வது இடத்தில் உள்ளார்.

ஆரஞ்சு கேப்க்கான 5 போட்டியாளர்கள்:

சமீர் ரிஸ்வி, ரோஹித் ஷர்மா, கூப்பர் கோனாலி, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, இஷான் கிஷன் மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோரில் யாரேனும் ஆரஞ்சு கேப் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ALSO READ: சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி.. ஆர்சிபியை இன்று வீழ்த்துமா..? ருதுராஜ் படை தாக்கு பிடிக்குமா?

பர்ப்பிள் கேப் தற்போது யாரிடம் உள்ளது..?

பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் 2025-ல் பர்ப்பிள் கேப்பை வென்றார். இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கிருஷ்ணா, மீண்டும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைத்த ரவி பிஷ்னோய், தற்போது 5 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் விஜய்குமார் வைஷாக், தனது பந்துவீச்சு மாறுபாடுகளால் பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து சிக்கவைத்து, இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புள்ளிவிவரங்களின் அடிப்படையில், டி நடராஜன் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரும் பர்ப்பிள் கேப்பை வெல்லும் போட்டியில் உள்ளனர். ஜெய்தேவ் உனத்கட் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.

பர்ப்பிள் நிற கேப்க்கான 5 போட்டியாளர்கள்:

ரவி பிஷ்னோய், விஜய்குமார் வைஷாக், டி நடராஜன், லுங்கி என்கிடி, ஜெய்தேவ் உனட்கட் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் யாரேனும் பர்ப்பிள் கேப் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Follow Us