AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி.. ஆர்சிபியை இன்று வீழ்த்துமா..? ருதுராஜ் படை தாக்கு பிடிக்குமா?

RCB vs CSK: ஐபிஎல் 2026-ன் 11-வது போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த ஸ்டேடியமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பொதுவாக இலக்கை விரட்டி அடிக்கவே விரும்பும். இந்த சீசனில் இதுவரை இந்த மைதானத்தில் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது.

IPL 2026: சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி.. ஆர்சிபியை இன்று வீழ்த்துமா..? ருதுராஜ் படை தாக்கு பிடிக்குமா?
ருதுராஜ் கெய்க்வாட் Vs ரஜத் படிதார்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Apr 2026 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் 2026-ன் (IPL 2026) 11-வது போட்டியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே (Chennai Super Kings) இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். கடந்த ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் மோதின என்பதும், அந்த இரண்டு போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசிப் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதில், 213 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக கட்டுபடுத்தி, பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ: அக்சருக்கு எதிராக அடுத்தடுத்து அவுட்.. கோபத்தில் கிளம்பிய ரோஹித் சர்மா!

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:

ஐபிஎல் 2026-ன் 11-வது போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த ஸ்டேடியமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பொதுவாக இலக்கை விரட்டி அடிக்கவே விரும்பும். இந்த சீசனில் இதுவரை இந்த மைதானத்தில் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 202 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.4 ஓவர்களில் எட்டி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 35 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 21 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாத்தியமான விளையாடும் லெவன்:

பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் பாடிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜேக்கப் டஃபி.

இம்பாக்ட் வீரர்: அபிநந்தன் சிங்.

ALSO READ: ரிஸ்வியின் ருத்ரதாண்டவம்.. மும்பையை ஓடவிட்ட டெல்லி கேபிடல்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஷிவம் துபே, கார்த்திக் சர்மா, சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது.

இம்பாக்ட் வீரர்: ராகுல் சாஹர்.

ஆர்சிபி vs சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் 2026 போட்டியை எங்கே பார்ப்பது?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2026-ன் அனைத்துப் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வழியாகக் கண்டு மகிழலாம்.

Follow Us