உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான கிட்னி கடத்தல் கும்பல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 50,000 ரூபாய் தொடர்பான தகராறே இந்த கோடிக்கணக்கான சட்டவிரோத சிறுநீரக விற்பனை நெட்வொர்க்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.