AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சு.. அதிரடியை தொடருமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

SRH vs LSG Toss Update: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

IPL 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சு.. அதிரடியை தொடருமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Apr 2026 15:28 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இது இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மூன்றாவது போட்டியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியின் இரண்டாவது போட்டியும் ஆகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷனும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட்டும் தலைமை தாங்குகின்றனர். இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் ஐபிஎல் 2026ல் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும்.

ALSO READ: தொடரும் சோகம்.. கடைசி இடத்தில் சிஎஸ்கே.. ஐபிஎல் லேட்டஸ்ட் புள்ளி அட்டவணை இதுதான்!

ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:


ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான ஆடுகளமாகும். அதன்படி, இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பந்து நல்ல பவுன்ஸுடன் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் தங்களது ஷாட்களை ஆட இது உதவுகிறது. இந்த பிற்பகல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்.

SRH மற்றும் LSG அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதல்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 4 போட்டிகளில் வெற்றி பெற்று லக்னோ அணி முன்னிலையில் உள்ளது. அதேநேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது. லக்னோவுக்கு எதிராக ஹைதராபாத்தின் அதிகபட்ச ஸ்கோர் 206 ஆகவும், லக்னோவின் அதிகபட்ச ஸ்கோர் 205 ஆகவும் உள்ளது.

ALSO READ: சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி.. ஆர்சிபியை இன்று வீழ்த்துமா..? ருதுராஜ் படை தாக்கு பிடிக்குமா?

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், லியாம் லிவிங்ஸ்டோன், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சவுத்ரி, மணிமாறன் சித்தார்த், அவேஷ் கான், முகமது ஷமி, திக்வேஷ் சிங் ரதி, பிரின்ஸ் யாதவ்

Follow Us