AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கேவுக்கு ஆதரவாக விழுந்த டாஸ்.. பேட்டிங் செய்ய வரும் ஆர்சிபி.. கலக்குவாரா கோலி?

RCB vs CSK Toss Update: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

IPL 2026: சிஎஸ்கேவுக்கு ஆதரவாக விழுந்த டாஸ்.. பேட்டிங் செய்ய வரும் ஆர்சிபி.. கலக்குவாரா கோலி?
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: RCB/twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Apr 2026 20:00 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (Royal Challengers Bengaluru) பேட்டிங் செய்ய அழைத்தது. இரு அணிகளும் தங்களது ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது சொந்த ஸ்டேடியத்தில் விளையாடுவதால் சூழல் சாதகமாக உள்ளது. இருப்பினும், 2 தோல்விகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டாயம் வெற்றி பெறும் சூழலில் உள்ளது.

ALSO READ: ஆர்சிபிக்கு எதிரான முக்கிய போட்டி.. கால் பதிக்கும் எம்.எஸ்.தோனி..?

இரு அணிகளின் விளையாடும் லெவன்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜாகோபிந்தன் சிங், ஜாகோபிந்தன் சிங்,

இம்பாக்ட் பிளேயர் விருப்பங்கள்: சுயாஷ் சர்மா, ஜேக்கப் பெத்தேல், ரசிக் சலாம் தார், கனிஷ்க் சவுகான், வெங்கடேஷ் ஐயர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது.

இம்பாக்ட் பிளேயர் விருப்பங்கள்: மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன், கார்த்திக் ஷர்மா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் சிங்.

ALSO READ: ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!

ஆர்சிபி vs சிஎஸ்கே: நேருக்கு நேர்:

இந்தப் போட்டிக்கு முன்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கும் இடையே ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 35 போட்டிகள் நடைபெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 21 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன, ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இருப்பினும், இந்த இரு அணிகளுக்கும் இடையே இதற்கு முன்பு நடைபெற்ற 3 போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே வெற்றி பெற்றுள்ளது.

Follow Us