IPL 2026: மழைக்கு வாய்ப்பு.. நடைபெறுமா சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி? வானிலை நிலவரம்!
RCB vs CSK Weather Forecast: பெங்களூரு வானிலை மையத்தின் அறிக்கையின்படி, போட்டி நடைபெறும் நாளில் மாலை 6 மணியளவில் மழை பெய்ய 26 சதவீத வாய்ப்புள்ளது. அதன்பிறகு ஒரு மணி நேரத்திற்கு மழைக்கான முன்னறிவிப்பு இல்லை. போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மாலை 7 மணிக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் 2026 (IPL 2026) தொடரின் 10வது லீக் போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கிடையே இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர், ஆனால் மழை இந்த உற்சாகத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் நாளில் மாலையில் பெங்களூருவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போட்டியின் போது நகரில் வானிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தொடரும் சோகம்.. கடைசி இடத்தில் சிஎஸ்கே.. ஐபிஎல் லேட்டஸ்ட் புள்ளி அட்டவணை இதுதான்!
ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணியின் இரண்டாவது மற்றும் சிஎஸ்கே அணியின் மூன்றாவது லீக் போட்டியாகும். சென்னை தனது தொடக்க ஆட்டங்கள் இரண்டிலும் தோல்வியடைந்தது, அதேசமயம் பெங்களூரு தனது பயணத்தை ஒரு வெற்றியுடன் தொடங்கியது. எனவே, மோசமான வானிலை மற்றும் மழை சென்னைக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தக்கூடும். எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி இடையேயான மோதலைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் . இருப்பினும், சிகிச்சையில் இருக்கும் தோனி விளையாட வாய்ப்பில்லை.




பெங்களூருவில் வானிலை எப்படி..?
பெங்களூரு வானிலை மையத்தின் அறிக்கையின்படி, போட்டி நடைபெறும் நாளில் மாலை 6 மணியளவில் மழை பெய்ய 26 சதவீத வாய்ப்புள்ளது. அதன்பிறகு ஒரு மணி நேரத்திற்கு மழைக்கான முன்னறிவிப்பு இல்லை. போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, அதாவது மாலை 7 மணிக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு 15 சதவீதமும், இரவு 9 மணிக்கு 23 சதவீதமும், காலை 10 மணிக்கு 00 சதவீதமும், காலை 11 மணிக்கு 7 சதவீதமும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை போட்டியை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மழையின் காரணமாகப் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியை எங்கே, எப்படி நேரலையில் பார்ப்பது?
பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டார் வழியாக உங்கள் மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவியிலும் போட்டியை நேரடியாகக் காணலாம்.
ALSO READ: சிஎஸ்கே அடுத்தடுத்து தோல்வி.. ஆர்சிபியை இன்று வீழ்த்துமா..? ருதுராஜ் படை தாக்கு பிடிக்குமா?
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதல்
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 35 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 21 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஆர்சிபி அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.