இசை உலகின் மறக்க முடியாத குரலான எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு கேரளாவில் மிகப் பிரமாண்டமான மரியாதை செலுத்தப்பட்டது. பாலக்காட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 10 அடி உயர சிலை திறந்து வைக்கப்பட்டு, அவரின் இசை பாரம்பரியம் கொண்டாடப்பட்டது. இந்த சிலையை பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் எஸ்பிபியின் மகன் சரண் இணைந்து திறந்து வைத்தனர்.