AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

INDvENG : இந்தியா 3 – 1 என்ற கணக்கில் வெல்லும் – சச்சின் உறுதி – என்ன காரணம்?

Sachin's Bold Prediction: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இந்த நிலையில் முதல் போட்டிகள் வருகிற ஜூன் 20, 2025 அன்று ஹெடிங்லீயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

INDvENG : இந்தியா 3 – 1 என்ற கணக்கில் வெல்லும் – சச்சின் உறுதி – என்ன காரணம்?
சுப்மன் கில் - கௌதம் காம்பீர் - சச்சின் டெண்டுல்கர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Jun 2025 15:09 PM IST

ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாக  இந்தியா (India) – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன்  20, 2025 அன்று ஹெடிங்லீயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்த தொடரில் இரு முக்கியமான வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா (Rohit Sharma) ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இளம் தலைமுறை வீரர்கள் இந்திய அணின் சார்பாக களமிறங்குகின்றனர். இந்தத் தொடரை சுப்மன் கில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக, இந்திய அணியை வழி நடத்தவிருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என கணித்துள்ளார்.

இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் பும்ரா

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவுக்கு சச்சின் அளித்த பேட்டியில், இங்கிலாந்து தொடரில், ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரின் அனுபவமும், திறமையும் இங்கிலாந்து அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பும்ரா நிச்சயமாக இந்தியாவின் ஸ்டிரைக் பவுலர். அவரைத் தொடர்ந்து மற்ற பந்துவீச்சாளர்களின் செயல்திறனும் முக்கியம். பிரசித், அர்ஷதீப் சிங், ஷார்தூல் தாக்கூர், நிதேஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ஜடேஜா, குல்தீப் ஆகியோரைக் கொண்ட பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ள அணியாக இந்தியா இருக்கிறது.

இந்தியா 3 – 1 கணக்கில் வெல்லும் என சச்சின் கணிப்பு – என்ன காரணம்?

 

மேலும் சச்சின் தெரிவித்துள்ளதாவது, பும்ரா தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார். ஒவ்வொரு டெஸ்ட்டுக்குப் பிறகும் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது முதுகுத்தண்டு பாதிப்பை தவிர்க்கும் வகையில், இந்த ஓய்வு அவருக்கு அளிக்கப்படவுள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பும்ரா எந்தப் போட்டிகளில் விளையாட வேண்டுமென்ற முடிவைத் தொடர் துவங்கும் முன்பே தீர்மானிக்கவில்லை. எல்லாம் சரியாக  நடந்தால் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என அவர் தெரிவித்தார்.

இந்த தொடரில், இந்தியா டெஸ்ட்  இரு முக்கிய வீரர்களை இழந்தாலும், புதிய நம்பிக்கையுடனும், இளம் தலைமுறையின் முழு உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. இந்த  நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 3-1 கணிப்பும், இந்தியா மீதான எதிர்பார்ப்பையும், புதிய வீரர்கள் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது.

Follow Us