ICC ODI Rankings: தரவரிசையில் காணாமல் போன ரோஹித், கோலி.. திடீரென ஓய்வா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Rohit Sharma, Virat Kohli Back in ICC ODI Rankings: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் தரவரிசையில் இணைந்துள்ளனர். இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டது என ஐசிசி தெரிவித்துள்ளது. ரோஹித் 2வது இடத்திலும், கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலி - ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் திடீரென ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ஐசிசி தரவரிசை பட்டியலில் மீண்டும் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர். முன்னதாக, வெளியான ஒருநாள் தரவரிசை பட்டியலில் ரோஹித் மற்றும் கோலியின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இருவரின் பெயர்களும் முதல் 10 இடங்களிலிருந்து மட்டுமல்ல, முதல் 100 இடங்களிலிருந்தும் இல்லை.
கடந்த வாரம், ஐசிசி ஒருநாள் தரவரிசையை வெளியிட்டபோது, இந்தியாவின் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தானின் பாபர் அசாமை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இப்போது, மீண்டும் ரோஹித் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2வது இடத்தையும், விராட் கோலி 4வது இடத்தையும் பிடித்தனர்.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? கேள்வி எழுப்பிய நிருபர்.. செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!
ஒருநாள் போட்டிகளில் விளையாடும் கோலி, ரோஹித்:
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள். இந்தநிலையில், விராட் மற்றும் ரோஹித்தின் பெயர்கள் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டதும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்றும், தற்போது இது மீண்டும் சரிபார்க்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விராட் மற்றும் ரோஹித் நீண்ட காலமாக எந்த ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை என்றும், எனவே இருவரின் பெயர்களும் ஐசிசி தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கூறி வந்தனர்.
புதிய ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல்:
THE KING & THE HITMAN ARE BACK IN ICC ODI RANKINGS:
– Rohit Sharma and Virat Kohli are back in ICC ODI batting Rankings, That’s was a glitch that got fixed Now.. pic.twitter.com/1SMaI9x5Gd
— MANU. (@IMManu_18) August 20, 2025
ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி சுப்மன் கில் 784 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதேநேரத்தில், ரோஹித் சர்மா 756 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 751 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 736 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 4வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 5வது இடத்திலும், இலங்கையின் சரித் அஸ்லாங்கா 4வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டிராக்டர் 5வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் 704 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் யார் முதலிடம்..?
தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஷவ் மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், கேஷவ் மகாராஜ் 2 இடங்கள் முன்னேறி 687 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளார். இலங்கையின் மகேஷ் தீக்ஷ்னா மற்றும் இந்தியாவின் குல்தீப் யாதவ் தலா ஒரு இடத்தை இழந்துள்ளனர். தீக்ஷ்னா 2வது இடத்திற்கும், குல்தீப் 3வது இடத்திற்கும் சரிந்துள்ளனர்.