100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கப்பட்ட கடனை தற்போது திருப்பி கேட்டு இந்திய குடும்பம் ஒன்று சட்ட நடவடிக்கைக்கு தயாராகி இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் பகுதியில் வசித்த தொழிலதிபரான சேத் ஜும்மாலால் ரூத்தியா, 1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 35 ஆயிரம் தொகையை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.