AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: விலகும் அஜித் அகர்கர்.. கிடைத்த அடுத்த தலைமை தேர்வாளர்.. பிசிசிஐ சாய்ஸ் இதுதான்!

Interim Chairman of Selection Committee: இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் பதவியில் அஜித் அகர்கருக்குப் பதில் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. பிசிசிஐ இவரை இடைக்கால தலைமைத் தேர்வாளராகப் பரிசீலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கவுதம் கம்பீர் தேர்வாளர்களைச் சந்தித்தபோது அகர்கர் இல்லை. வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் 2027 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் திட்டங்களுக்கு மிக முக்கியமானது.

Team India: விலகும் அஜித் அகர்கர்.. கிடைத்த அடுத்த தலைமை தேர்வாளர்.. பிசிசிஐ சாய்ஸ் இதுதான்!
பிரக்யான் ஓஜா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2026 16:03 PM IST

இந்திய அணியின் (Indian Cricket Team) தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கருக்குப் பதிலாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிசிசிஐ தற்போது பிரக்யான் ஓஜாவை (Pragyan Ojha) இடைக்கால தலைமைத் தேர்வாளராக நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. தற்போதைய தேர்வாளர்களில், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரக்யானுக்குத்தான் அதிக டெஸ்ட் போட்டி அனுபவம் உள்ளது. சமீபத்தில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் 4 தேர்வாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில், அஜித் அகர்கர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: விராட் கோலியின் அதிருப்தி.. இதுதான் நடந்தது.. முகமது கைஃப் சொன்ன புது தகவல்

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, பிரக்யான் ஓஜாவை இடைக்கால தலைமைத் தேர்வாளராக நியமிப்பது குறித்து பிசிசிஐ தற்போது பரிசீலித்து வருகிறது. தொடர்ந்து, ஓஜாவையே அடுத்த முழுநேர தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை பிசிசிஐ விரைவில் அறிவிக்க வேண்டியிருப்பதால், கவுதம் கம்பீர், பிரக்யான் ஓஜா, ஆர்.பி. சிங், அஜய் ராத்ரா மற்றும் ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோரைச் சந்தித்து பேசினார்.

ஒருபுறம், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகள் வேகம் பெற்று வருகின்றன. புதிய வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மறுபுறம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஒரு முக்கியமான கட்டத்தில் இந்திய அணி உள்ளது. இதற்கிடையில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி20 அணியும் உத்வேகத்தைப் பெற ஆர்வமாக உள்ளது. இந்தச் சூழலில், நியூசிலாந்து சுற்றுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியின் அடுத்த சுற்றுப்பயணம் எப்போது..?

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடும். இறுதியாக, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும்.

யார் இந்த பிரக்யான் ஓஜா..?


பிரக்யான் ஓஜா இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தேர்வுக் குழுவில் உள்ள தேர்வாளர்களிலேயே, இவரே அதிக டெஸ்ட் போட்டி அனுபவம் கொண்டவர் ஆவார். மேலும், ஓஜா 2008 முதல் 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களிலும் விளையாடியுள்ளார்.

ALSO READ: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா..? தடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்..? 2வது ஒருநாள் போட்டி விவரங்கள்!

இடது கை சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள பிரக்யான் ஓஜா இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், 6 டி20 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Follow Us