விராட் கோலியின் போராட்டம் வீண் – 41 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம் – தொடரையும் வென்றது!

IndvsNz : இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதனையடுத்து நியூசிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

விராட் கோலியின் போராட்டம் வீண் - 41 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம் - தொடரையும் வென்றது!

இந்தியா - நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி

Updated On: 

18 Jan 2026 21:43 PM

 IST

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் டெவான் கான்வே 4 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் கிளமிறங்கிய தொடக்க வீரர் ஹென்றி நிக்கல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் ஆரம்ப கட்டத்திலேயே நியூசிலாந்து அணி தடுமாறியது. ஆனால் அதற்குப் பிறகு களமிறங்கிய டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டார். தொடர்ந்து நிலைத்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 131 பந்துகளில் 137 ரன்கள் குவித்தார்.

மிட்செல் அதிரடி சதம்

இது இந்த தொடரில் மிட்செல் அடிக்கும் இரண்டாவது சதமாகும். முதல் ஒருநாள் போட்டியில் அவர் 84 ரன்கள் எடுத்திருந்தார். மிட்செலுடன் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ், 88 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இவர்கள் ஜோடி நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தை அதிகரிக்க முக்கிய பங்கு வகித்தது. அவர்களுடன் வில் யங் 41 பந்துகளில் 30 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் குவித்தது.

இதையும் படிக்க : BBL 2026: கடைசி பந்தில் ஓடி வர மறுத்த ஸ்மித்.. கடுப்பில் வெளியேறிய அசாம்! என்ன நடந்தது?

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 11 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களுக்கும், கேஎல் ராகுல் 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இதையும் படிக்க : Washington Sundar: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!

ஒருபக்கம் விக்கெட்டுகள் போனாலும் விராட் கோலி மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் நிதிஷ் குமார் ரெட்டி ன் பங்குக்கு அரைசதம் அடித்து கிரிஸ் கிளார்க் பந்தில் அவுட்டானார். விராட் கோலியுடன் ஹர்ஷித் ராணா ஜோடி சேர்ந்தார். அவர் அதிரடியாக  ஆட ரசிகர்களுக்கு மீண்டும் போட்டியின் மீது நம்பிக்கை பிறந்தது ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அரை சதம் கடந்த ஹர்ஷித் ராணா, 43 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதனையடுத்து நியூசிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..