Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BBL 2026: கடைசி பந்தில் ஓடி வர மறுத்த ஸ்மித்.. கடுப்பில் வெளியேறிய அசாம்! என்ன நடந்தது?

Babar Azam Viral Video: சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் இன்னிங்ஸின் 11வது ஓவரில், அணி 190 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது, ​​பாபர் அசாம் தொடர்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆனால், பாபரின் ஸ்ட்ரைக் ரேட் அவரை விட கணிசமாகக் குறைவாக இருந்தது.

BBL 2026: கடைசி பந்தில் ஓடி வர மறுத்த ஸ்மித்.. கடுப்பில் வெளியேறிய அசாம்! என்ன நடந்தது?
பாபர் அசாம் - ஸ்டீவ் ஸ்மித்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jan 2026 19:55 PM IST

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2025-26 பிக் பாஷ் லீக்கின் (BBL 2026) 37வது போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்த பிபிஎல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் வெறும் 40 பந்துகளில் சதத்தை கடந்து அசத்தினர். இருப்பினும், இந்த போட்டியின்போது நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போட்டியின் போது, ​​ஸ்டீவ் ஸ்மித் 11வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க மறுத்தார். அப்போது, மற்றொரு தொடக்க வீரரான பாபர் அசாமை (Babar Azam) கோபப்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் பாபர் அசாமை அவமதித்தாரா?

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் இன்னிங்ஸின் 11வது ஓவரில், அணி 190 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது, ​​பாபர் அசாம் தொடர்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆனால், பாபரின் ஸ்ட்ரைக் ரேட் அவரை விட கணிசமாகக் குறைவாக இருந்தது. அந்த ஓவரில் பாபர் தொடர்ச்சியாக மூன்று டாட் பந்துகளை எதிர்கொண்டார். தொடர்ந்து, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்ட்ரைக்கை சுழற்ற ஒரு சிங்கிளை தட்டினார். இருப்பினும், ஸ்மித் ரன் எடுக்க ஓடி வரவில்லை. இது பாபர் அசாமை அதிருப்தியில் ஆழ்த்தியது.

பவர் சர்ஜ் விதி:


ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த முடிவுக்குக் காரணம் பவர் சர்ஜ் விதி. பவர் சர்ஜ் என்பது பிபிஎல்லில் உள்ள ஒரு விதியாகும். இதில் ஆரம்ப நான்கு ஓவர் பவர் பிளேக்குப் பிறகு, பேட்டிங் அணி இன்னிங்ஸின் 11வது ஓவருக்குப் பிறகு எந்த நேரத்திலும் மற்றொரு இரண்டு ஓவர் பவர் பிளேயைத் தேர்வுசெய்யலாம். அப்போது, 2 பீல்டர்கள் மட்டுமே 30-யார்டு வட்டத்திற்கு வெளியே இருப்பார்கள். ஸ்டீவ் ஸ்மித் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார், அதுதான் நடந்தது. இன்னிங்ஸின் 12வது ஓவரில் ஸ்மித் மொத்தமாக 30 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, அடிக்க முயற்சித்த பாபர் அசாம் அவுட்டாகி கோபத்துடன் வெளியேறினார்.

பிபிஎல்லில் மோசமான நிலையில் பாகிஸ்தான் வீரர்கள்:

பாகிஸ்தான் வீரர்கள் பிபிஎல்லில் அவமானத்தை சந்திப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, இந்த சீசனின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி மிட் ஓவரில் பந்து வீசுவதில் இருந்து நீக்கப்பட்டார். அவர் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அந்த நேரத்தில், அவரது மூன்றாவது ஓவரில் இரண்டு ஹை ஃபுல் டாஸ்கள் வீசப்பட்டதால், நடுவர் அவரை மேலும் பந்து வீசுவதைத் தடுத்தார். இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, முகமது ரிஸ்வான் மெதுவாக பேட்டிங் செய்ததால் பேட்டிங் செய்யும் போது திடீரென வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.