AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mumbai Indians Luck: மும்பைக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்..? புலம்பி தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

Ravichandran Ashwin: ஐபிஎல் 2025 எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்தது அதிர்ச்சியளித்தது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றியை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர், மும்பை அணியின் அதிர்ஷ்டம் குறித்தும், 2018ல் நடந்த ஒரு போட்டியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மும்பைக்கு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையையும் எடுத்துக்காட்டினார். இறுதிப்போட்டி வாய்ப்பிற்காக மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

Mumbai Indians Luck: மும்பைக்கு எப்படி இப்படி ஒரு அதிர்ஷ்டம்..? புலம்பி தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
ரவிச்சந்திரன் அஸ்வின்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jun 2025 21:06 PM IST

ஐபிஎல் 2025ல் (IPL 2025) சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்று வெளியேறியது. ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து, தற்போது மும்பை அணி குவாலிஃபையரில் இன்று அதாவது 2025 ஜூன் 1ம் தேதி பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் எந்த அணி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஒவ்வொரு ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் எப்படி வருகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மும்பை அணிக்கு அதிர்ஷடம்:

முன்னாள் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிர்ஷ்டம் குறித்தும், ஒவ்வொரு முக்கிய போட்டியிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு எவ்வாறு சாதகமாக இருக்கும் என்பது குறித்தும் பேசினார். அது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், “அது 2018ம் ஆண்டு. அந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் லெவன் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது நான் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

திடீரென ஸ்டேடியத்தின் மின் விளக்குகள் அணைந்தன. சுமார் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் மின்சாரம் வந்த பிறகு போட்டி தொடங்கியபோது, ​​களத்தில் இருந்த பொல்லார்ட் அதிரடியாக பேட்டிங் செய்து 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்தார். அவரது அற்புதமான இன்னிங்ஸின் உதவியுடன், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.” என்றார்.

அஸ்வின் பேசிய காட்சிகள்:

தொடர்ந்து, பேசிய அவர், “ இதுமாதிரி பல நிகழ்வுகள் உண்டு. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சாதகமாக இருக்கும். அதுவே அவர்களின் வெற்றிகளுக்கு வழிவகுக்கும். இது ஒவ்வொரு முறையும் எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். ” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் 2025 ஆரம்பத்தில் சொதப்பிய மும்பை:

2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தொடர்ந்து, 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, மீண்ட மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற குவாலிஃபையர்-2 இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றிபெற வேண்டும்.

Follow Us