AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2025 Qualifier 2: அகமதாபாத்தில் வெற்றிக்காக 11 ஆண்டுகள் காத்திருப்பு..! பஞ்சாபை வீழ்த்தி விதியை மாற்றுமா மும்பை..?

Punjab Kings vs Mumbai Indians: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2ல், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை. இந்தநிலையில், பஞ்சாப் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற மும்பை இந்தியன்ஸ் அணி இன்று கடுமையாக போராடும்.

IPL 2025 Qualifier 2: அகமதாபாத்தில் வெற்றிக்காக 11 ஆண்டுகள் காத்திருப்பு..! பஞ்சாபை வீழ்த்தி விதியை மாற்றுமா மும்பை..?
ஷ்ரேயாஸ் ஐயர் - ஹர்திக் பாண்ட்யாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jun 2025 14:33 PM IST

ஐபிஎல் 2025ன் (IPL 2025) குவாலிஃபையர் 2ல் இன்று அதாவது 2025 ஜூன் 1ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸை (Punjab Kings) எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இந்த மிகவும் முக்கியமானது. இதில், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ராசியாக இருந்தது இல்லை. அதன்படி, விதியை மாற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேற, பல ஆண்டுகளாக இருந்த காத்திருப்பு முற்றுப்புள்ளிக்கு வரும்.

11 ஆண்டுகள் காத்திருப்பு:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு பல ஆண்டுகளாக சொதப்பி வருகிறது. இந்த ஸ்டேடியத்தில் மும்பை அணி தான் விளையாடிய கடைசி 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், கடந்த ஐபிஎல் 2023ன் குவாலிஃபையர் 2 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 233 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய மும்பை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2014 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் மும்பை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதாவது கடந்த 11 ஆண்டுகளில் அவர் இங்கு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்தத் தொடர் தோல்வியை முறியடிப்பது அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனேவுக்குப் பெரிய சவாலாக இருக்கும்.

செய் அல்லது செத்துமடி:

ஐபிஎல் 2025 எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபையர் 2க்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அற்புதமாக செயல்பட்டதன் மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1ல் தோல்விக்கு பிறகு களமிறங்குகிறது. மும்பை – பஞ்சாப் இடையிலான இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 17 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில், பஞ்சாப் அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் இரு அணிகளும் ஒரு போட்டிகளில் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றது.

Follow Us