AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rohit Sharma: உங்களை எப்படி அவுட் செய்வது..? ரோஹித்திடம் ஜாலியாக கேட்ட சிறுவன்.. ஹிட் மேன் சுவாரஸ்ய பதில்!

IPL 2025 Qualifier 2: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஒரு இளம் ரசிகர் ரோஹித் சர்மாவை எப்படி அவுட் செய்வது எனக் கேட்டதற்கு, அவர் "அது சாத்தியமில்லை" என வேடிக்கையாக பதிலளித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மா டி20யில் 550 சிக்ஸர்களை அடிக்க இன்னும் 3 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

Rohit Sharma: உங்களை எப்படி அவுட் செய்வது..? ரோஹித்திடம் ஜாலியாக கேட்ட சிறுவன்.. ஹிட் மேன் சுவாரஸ்ய பதில்!
ரோஹித் சர்மாImage Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jun 2025 18:03 PM IST

ஐபிஎல் 2025ன் (IPL 2025) குவாலிஃபையர் 2ல் இன்று அதாவது 2025 ஜூன் 1ம் தேதி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் அகமதாபாத்திற்கு சென்றுள்ளனர். இந்த போட்டிக்கு முன், ஒரு இளம் ரசிகர் ஒருவர், ரோஹித் சர்மாவிடம் (Rohit Sharma) உங்களை எப்படி அவுட் செய்வது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ரோஹித் சர்மா சுவாரஸ்யமான பதிலை அளித்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

என்ன கூறினார் ரோஹித் சர்மா..?

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரோஹித் சர்மாவை சுற்றி, மும்பை இந்தியன்ஸ் ஜெர்சி அணிந்த சிறுவர்கள் சிலர் இருந்தனர். அப்போது, ஒரு இளம் ரசிகர் ஒருவர், ரோஹித் சர்மாவிடம் அவரது பேட்டிங் பலவீனம் குறித்து கேட்டார். அதாவது, ரோஹித் சர்மாவிடம் அந்த ரசிகர் நேரடியாக உங்களை எப்படி அவுட் செய்வது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, ”அது சாத்தியவில்லை” என்று தெரிவித்தார்.

பார்ம் அவுட் டூ பார்ம்:

நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 2வது வீரராக ரோஹித் சர்மா உள்ளார். இதுவரை 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 150.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 4 அரைசதங்களுடன் 410 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2025 சீசன் தொடங்கியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அடுத்த 7 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து குறைந்த ஸ்கோர்களை மட்டுமே பதிவு செய்தார்.

மீண்டும் சென்னைக்கு எதிரான 2வது போட்டியில் பார்முக்கு திரும்பிய ரோஹித் சர்மா, 45 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 81 ரன்கள் என அடுத்தடுத்து அசத்தினார்.

டி20 போட்டியில் 550 சிக்ஸர்கள்:

மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தால் டி20 போட்டிகளில் 550 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைக்க முடியும். ரோஹித் சர்மா தற்போது வரை டி20யில் 452 போட்டிகளில் விளையாடி 547 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதுவரை இந்த சாதனையை 6 பேட்ஸ்மேன்கள் படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இதுவரை 463 போட்டிகளில் விளையாடி 1056 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

  1. கிறிஸ் கெய்ல் – 463 போட்டிகளில் 1056 சிக்ஸர்கள்
  2. கீரன் பொல்லார்டு – 695 போட்டிகளில் 908 சிக்ஸர்கள்
  3. ஆண்ட்ரே ரஸ்ஸல் – 551 போட்டிகளில் 747 சிக்ஸர்கள்
  4. நிக்கோலஸ் பூரன் – 398 போட்டிகளில் 639 சிக்ஸர்கள்
  5. அலெக்ஸ் ஹேல்ஸ் – 496 போட்டிகளில் 560 சிக்ஸர்கள்
  6. காலின் மன்ரோ – 441 போட்டிகளில் 557 சிக்ஸர்கள்
  7. ரோஹித் சர்மா – 452 போட்டிகளில் 547 சிக்ஸர்கள்

Follow Us