Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

90’s கிட்ஸ்களின் ஃபேவரட்.. ஓய்வு பெற்றார் WWE வீரர் ஜான் சீனா.. கண்ணீர் மல்க விடைகொடுத்த ரசிகர்கள்

John Cena Retirement: பதினாறு முறை WWE சாம்பியன்ஷிப், பல ராயல் ரம்பிள் வெற்றிகள், ரெஸில்மேனியா மெயின் ஈவென்ட் என அவரது சாதனைகள் எண்ணற்றவை. இந்த ஆண்டு தொடக்கத்தில் கோடி ரோட்ஸை எதிர்த்து சண்டையிட்டு, 17வது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ரிக் ஃப்ளேரின் சாதனையை முறியடித்தார்.

90’s கிட்ஸ்களின் ஃபேவரட்.. ஓய்வு பெற்றார் WWE வீரர் ஜான் சீனா.. கண்ணீர் மல்க விடைகொடுத்த ரசிகர்கள்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Dec 2025 18:16 PM IST

டிசம்பர் 15, 2025: பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா, தனது கடைசி போட்டியில் டேப் அவுட் முறையில் தோல்வி அடைந்து ஓய்வு பெற்றார். இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு, அவரது கடைசி போட்டியில் ஏற்பட்ட தோல்வி பலரையும் கண்கலங்க வைத்தது. 90’s கிட்ஸ்களுக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் மனதுக்கு நெருக்கமானவை. அதில் குறிப்பாக WWE நிகழ்ச்சிக்கு தனி இடம் உண்டு. இதில் தோன்றிய மல்யுத்த வீரர்களான தி ராக், பிக் ஷோ, அண்டர்டேக்கர், ரேண்டி ஆர்டன், எட்ஜ், கேன், ட்ரிபில் எச் உள்ளிட்ட பலரும் தங்களது தனித்துவமான ஆட்டத்தால் மக்களை கவர்ந்துள்ளனர். அதில் குறிப்பாக ஜான் சீனா, 90’s கிட்ஸ்களின் ஃபேவரட் என்றே சொல்லலாம்.

பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா:

“நெவர் கிவ் அப்”, “யூ காண்ட் சீ மீ” என்ற வாசகங்கள் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வீரராக அவர் திகழ்ந்தார். அவர் சண்டையிடும் ரிங்கிற்குள் வருவதற்கு முன்பு ஒலிக்கும் அவரது என்ட்ரி பாடல், பல இடங்களில் ரிங்டோனாக ஒலித்தது உண்டு. 2002ஆம் ஆண்டு WWE போட்டிகளில் நுழைந்த ஜான் சீனா, தனது தனித்துவமான ஸ்டைலும் சண்டை பாணியாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மல்யுத்த உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் அண்டர்டேக்கர், பட்டீஸ்டா, ரேண்டி ஆர்டன், பிக் ஷோ, ட்ரிபிள் எச், ஹல்க் ஹோகன் உள்ளிட்ட பலரையும் எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்றவர் ஜான் சீனா. அவர் 17 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

டேப் அவுட் முறையில் தோல்வியடைந்து ஓய்வுபெற்ற ஜான் சீனா:


இவ்வாறு WWE-யில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த ஜான் சீனா, நேற்று வாஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் “தி ரிங் ஜெனரல்” குன்தரிடம் டேப் அவுட் முறையில் தோல்வி அடைந்தார். அவரது தோல்வி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, பலரையும் கண்கலங்க வைத்தது.

மேலும் படிக்க: இந்தியா-தென்னாப்பிரிக்கா அடுத்த மோதல் எப்போது? முழு விவரம் இதோ!

பதினாறு முறை WWE சாம்பியன்ஷிப், பல ராயல் ரம்பிள் வெற்றிகள், ரெஸில்மேனியா மெயின் ஈவென்ட் என அவரது சாதனைகள் எண்ணற்றவை. இந்த ஆண்டு தொடக்கத்தில் கோடி ரோட்ஸை எதிர்த்து சண்டையிட்டு, 17வது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ரிக் ஃப்ளேரின் சாதனையை முறியடித்தார்.

கண்ணீர் மல்க விடைகொடுத்த ரசிகர்கள்:


இந்த நிலையில், 48 வயதான ஜான் சீனா தனது கடைசி போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மேடையில் நின்று தனது ஷூக்களையும் கையில் அணிந்திருந்த ஆர்ம் பேண்டையும் கழற்றி வைத்துவிட்டு ரசிகர்களை நோக்கி தலை வணங்கினார். பின்னர், வழக்கம்போல் ஒலிக்கும் “யூ காண்ட் சீ மீ” பாடல் இல்லாமல், ரசிகர்களின் கோஷங்களுக்கு மத்தியில் நடந்து சென்று கடைசியாக சல்யூட் அடித்தார். இந்த காட்சிகள் அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தன.

மல்யுத்த போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும், 2030ஆம் ஆண்டு வரை டபிள்யூடபிள்யூஇ உடன் அம்பாசிடராகவும் மென்டராகவும் இருப்பார் என கூறப்படுகிறது. அவர் விடைபெறும் தருணத்தில், “நன்றி ஜான் சீனா” என மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்தது. மல்யுத்த உலகில் பலரும் வரலாம், போகலாம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அதில் ஒருவர் தான் ஜான் சீனா.