Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: சுவையில் ’வாவ்’ சொல்ல வைக்கும் ரெசிபி.. சூப்பரான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?

Fish Pickle: மீன் பிரியராகவும், ஊறுகாய் பிரியராகவும் இருந்தால், மீன் ஊறுகாயை ட்ரை பண்ணலாம். இதன் சுவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இப்படியான சூழ்நிலையில், சூப்பரான சுவையான மீன் ஊறுகாயை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். மீன் ஊறுகாய் மீன், மசாலா மற்றும் வினிகர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

Food Recipe: சுவையில் ’வாவ்’ சொல்ல வைக்கும் ரெசிபி.. சூப்பரான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?
மீன் ஊறுகாய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Dec 2025 18:36 PM IST

மீன் (Fish) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மீனில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மீனில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய் (Heart Disease), மனச்சோர்வு மற்றும் ஆஸ்துமா போன்ற உடல்நல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. அந்தவகையில், மீன் பிரியராகவும், ஊறுகாய் பிரியராகவும் இருந்தால், மீன் ஊறுகாயை ட்ரை பண்ணலாம். இதன் சுவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இப்படியான சூழ்நிலையில், சூப்பரான சுவையான மீன் ஊறுகாயை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். மீன் ஊறுகாய் மீன், மசாலா மற்றும் வினிகர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மீனை சிறிய க்யூப்ஸ் அல்லது சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, பின்னர் மசாலா மற்றும் வினிகர் கலவையில் ஊறவைக்க வேண்டும். இதை தயாரிக்க சுமார் 10 நாட்கள் ஆகும்.

ALSO READ: மாஸா டேஸ்ட்டா சூப்பரான மட்டன் ப்ரை.. எளிதாக இப்படியும் செய்யலாமா?

மீன் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

  • பாறை மீன் – 700 கிராம்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வினிகர் – 3 ஸ்பூன்
  • எண்ணெய் – 3 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • இஞ்சி – 40 கிராம்
  • பூண்டு – 2

ALSO READ: வீட்டிலேயே பக்கா டேஸ்ட்.. பஞ்சாபி ஸ்டைலில் பட்டர் சிக்கன் இப்படி செய்யுங்க..!

மீன் ஊறுகாய் செய்வது எப்படி..?

  1. மீன் ஊறுகாய் செய்ய முதலில் பாறை மீனை நன்கு கழுவி, சதுர துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அப்படி இல்லையென்றால், மீன் மார்க்கெட்டில் தேவையான அளவில் வெட்டி வாங்கி கொள்ளவும்.
  2. இப்போது வெட்டி வாங்கிய மீன் துண்டுகளை ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, 1 ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 3 ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மசாலா மீன் துண்டுகளில் இறங்கும்படி மீண்டும் மீண்டும் கலக்கவும். அடுத்ததாக, மீனை மூடி சுமார் 3 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  4. 3 நாட்களுக்கு பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 3 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், மரைனேட் செய்த மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பிரட்டவும். மீன் வெந்ததும், அடுப்பதை ஆப் செய்து ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும்.
  5. மீன் வறுத்த எண்ணெயை மீண்டும் சூடாக்கி 2 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் வெந்தயம், 6 கறிவேப்பிலை மற்றும் 40 கிராம் வெட்டப்பட்ட இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து, நசுக்கிய பூண்டையும் சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு பிறகு, 2 ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் வினிகரை சேர்க்கவும்.
  6. மசாலாக்கள் நன்றாக பொரிந்ததும், வறுத்து தனியாக எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டி அடுப்பை ஆஃப் செய்யவும். அவ்வளவுதான் மீன் ஊறுகாய் ரெடி. மீன் ஊறுகாயின் சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி கொள்கலனில் மாற்றி மூடி வைத்து தேவையான நேரத்தில் ருசிக்கலாம்.