Food Recipe: வீட்டிலேயே பக்கா டேஸ்ட்.. பஞ்சாபி ஸ்டைலில் பட்டர் சிக்கன் இப்படி செய்யுங்க..!
Punjabi Style Butter Chicken: உணவகம் போன்ற சுவை மற்றும் நறுமணத்துடன் கூடிய பட்டர் சிக்கனை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ரெசிபியை, நாண் அல்லது சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்படியான கிரீமி மற்றும் காரமான பட்டர் சிக்கனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
அசைவ உணவு (Non Veg) என்று வரும்போது, முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது சிக்கன்தான். எல்லா வயதினரையும் ரசனையையும் ஈர்க்கும் ஒரு உணவு சிக்கன் என்றே சொல்லலாம். இதிலிருந்து செய்யப்படும் பட்டர் சிக்கனும் (Butter Chicken) தனித்துவ சுவையை தரும். பஞ்சாபி சமையலறைகளில் இருந்து உருவான இந்த உணவு இப்போது உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும் இது அனைத்து உயர்தர உணவகங்களிலும் அதிகளவில் விற்பனைக்கு ஆகும். அந்தவகையில், உணவகம் போன்ற சுவை மற்றும் நறுமணத்துடன் கூடிய பட்டர் சிக்கனை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ரெசிபியை, நாண் அல்லது சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்படியான கிரீமி மற்றும் காரமான பட்டர் சிக்கனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மழைக்காலத்தில் மாலைநேர ஸ்நாக்ஸ்.. சூடான ப்ரான் பக்கோடா ரெசிபி இதோ!




பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
மாரினேஷனுக்கு..
- எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
- தயிர் – 1/2 கப்
- இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – 1 ஸ்பூன்
கிரேவிக்கு..
- வெண்ணெய் – 2 டீஸ்பூன்
- தக்காளி – 3
- முந்திரி – 10-12
- இஞ்சி – 1 அங்குல துண்டு
- பூண்டு – 4-5 பல்
- பச்சை மிளகாய் – 1
- காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி – 1 ஸ்பூன்
- கிரீம் (புதியது) – 2-3 ஸ்பூன்
- தேன் அல்லது சர்க்கரை – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
ALSO READ: ஜில் மழையுடன் ஹாட் ஸ்நாக்ஸ்.. சிம்பிள் & டேஸ்ட் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் ரெசிபி!
பட்டர் சிக்கன் செய்வது எப்படி..?
- சிக்கன் துண்டுகளை மரைனேட் செய்ய மேலும் மாரினேஷனுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து பொருட்களுடனும் நன்றாக கலந்து, குளிர்சாதன பெட்டியில் 1 முதல் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி, ஊறவைத்த கோழியை மிதமான தீயில் பொன்னிறமாக வேகும் வரை காத்திருந்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- அடுத்ததாக தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை சிறிது தண்ணீருடன் சேர்த்து 8-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இது ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்யவும்.
- இப்போது, ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி, தயாரிக்கப்பட்ட தக்காளி-முந்திரி விழுதைச் சேர்க்கவும். தொடர்ந்து, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, தேன்/சர்க்கரை மற்றும் கரம் மசாலா சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
- இப்போது சமைத்து எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- கடைசியாக கசூரி மேத்தி மற்றும் கிரீம் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். அவ்வளவுதான் சுவையான பட்டர் சிக்கன் ரெடி.