Food Recipe: மாஸா டேஸ்ட்டா சூப்பரான மட்டன் ப்ரை.. எளிதாக இப்படியும் செய்யலாமா?
Hotel-Style Mutton Fry: மட்டன் சேர்த்து செய்யக்கூடிய பல உணவுகளில், மட்டன் ஃப்ரை மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் உணவில் மட்டன் ஃப்ரை இருந்தால், அந்த உணவின் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். அப்படி மட்டன் ஃப்ரை செய்வதும் மிகவும் எளிது.
அசைவ உணவு பிரியர்கள் நாள்தோறும் பல வகையான அசைவ உணவுகளை ருசிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக, எளிதாக கிடைக்கக்கூடிய சிக்கன் (Chicken) மற்றும் மட்டனில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் நம் நாக்கில் நீரை ஊற செய்யும். அதிலும் குறிப்பாக, மட்டன் உணவுகள் அசைவ உணவு பிரியர்களிடையே மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. மட்டனில் (Mutton Recipe) இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் அற்புதமான சுவையை தரும். குறிப்பாக மட்டன் பிரியாணி, மட்டன் தொக்கு, மட்டன் கிரேவி, மட்டன் மசாலா, மட்டன் ட்ரை மசாலா போன்ற பல்வேறு மட்டன் ரெசிபிகளை செய்து ருசிப்பதும் பலருக்கு தினந்தோறும் வேலையாக இருக்கும். அசைவ ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தாபாக்களில் பரிமாறப்படும் சுவையான மட்டன் உணவுகள் உங்களுக்கு பேவரைட்டாக கூட இருக்கலாம்.
மட்டன் சேர்த்து செய்யக்கூடிய பல உணவுகளில், மட்டன் ஃப்ரை மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் உணவில் மட்டன் ஃப்ரை இருந்தால், அந்த உணவின் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். அப்படி மட்டன் ஃப்ரை செய்வதும் மிகவும் எளிது. மட்டனின் சுவையை ருசிக்க, அதை மிளகாய் தூளின் வாசனையுடன் வறுத்தெடுக்க வேண்டும். இந்த காரமான மட்டன் பொரியல் சூடான வெள்ளை சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். அந்தவகையில், இந்த மட்டனை எப்படி ப்ரை செய்வது? மட்டனை ப்ரை செய்ய தேவையான பொருட்கள் என்ன? அதைச் செய்யும் முறை என்ன, எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வீட்டிலேயே பக்கா டேஸ்ட்.. பஞ்சாபி ஸ்டைலில் பட்டர் சிக்கன் இப்படி செய்யுங்க..!




மட்டன் ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
- மட்டன்
- சோம்பு
- வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- இஞ்சி பூண்டு விழுது
- உப்பு
- கருப்பு மிளகு தூள்
- மிளகாய் தூள்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- எண்ணெய்
- உப்பு
ALSO READ: மண மணக்கும் மட்டன் தால்சா.. பிரியாணிக்கு இப்படி ஒரு சைடிஸா?
மட்டன் ப்ரை செய்வது எப்படி..?
- முதலில் கடைகளில் வாங்கி வந்த மட்டனை தண்ணீரில் உப்பு மஞ்சள் போட்டு நன்றாக அலசி எடுத்து கொள்ளவும். இப்போது இதனை குக்கரில் தேவையான அளவு மஞ்சள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை வேக வைக்கவும்
- இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். பின்னர் சோம்பு , காய்ந்த மிளகாய், இறுதியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, ஒரு தக்காளி சேர்த்து கலக்கவும்.
- 2 நிமிடங்களுக்குப் பிறகு வேகவைத்த மட்டனை அதில் சேர்க்கவும். வேகவைக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்த்திருப்பதே போதுமானது. இப்போது மட்டன் வேகவைத்த தண்ணீரை சிறிதளவு சேர்க்கவும்.
- அடுத்ததாக மிளகாய் தூள்,மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கலக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து வறுக்கவும். மட்டன் சமைக்கும்போது உப்பு சேர்ப்பதால், ருசிக்கேற்ப மட்டனில் உப்பு சேர்க்கவும்.
- காரமாக வேண்டுமென்றால், கடைசியில் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து தண்ணீர் சிறிது ஆவியாகும் வரை வதக்கவும்.
- தண்ணீர் வற்றி மட்டன் நன்றாக சுருங்கி, மசாலாக்களுடன் கலந்திருந்தால் ஒரு சுவையான மட்டன் வறுவல் தயார். இந்த ஹோட்டல் ஸ்டைல் மட்டன் ரெசிபியை வீட்டிலேயே செய்து ருசியுங்கள்.