AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஹைதராபாத்தை கதறவிட்ட சூர்யவன்ஷி.. 243 ரன்கள் குவித்த ராஜஸ்தான்!

SRH vs RR Eliminator: ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் 243 குவித்தது. 

IPL 2026: ஹைதராபாத்தை கதறவிட்ட சூர்யவன்ஷி.. 243 ரன்கள் குவித்த ராஜஸ்தான்!
Rr Eliminator
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 27 May 2026 21:59 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) எலிமினேட்டர் சுற்றில் இன்று அதாவது 2026 மே 27ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணியும் முல்லன்பூரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 5 பவுண்டரி 12 சிக்ஸர்கள் உதவியுடன் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் வரலாற்றிலேயே அதிவேக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் 243 குவித்தது.

மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுகொடுத்தாலும், பாட் கம்மின்ஸ் சிக்கனமாக பந்துவீசுவார். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு எதிராக இந்த எலிமினேட்டர் போட்டியில், கம்மின்ஸ் 4 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி களத்தில் இருந்தவரை, ராஜஸ்தான் அணி இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தியது. முதல் 8 ஓவர்களில் ராஜஸ்தான் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 12 ஓவர்களில் 118 ரன்களை மட்டுமே எடுத்தது.

ALSO READ: மே மாதம் வாட்டி வதைக்கும் வெயில்..! செப்டம்பர் மாதத்தில் மாறுகிறதா ஐபிஎல்..? வெளியான தகவல்!

ஐபிஎல் பிளேஆஃப்களில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்

ஒரு நாள் முன்னதாக, தகுதிச் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 254 ரன்கள் எடுத்தது. இது பிளேஆஃப் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 243 ரன்கள் எடுத்தது, இது பிளேஆஃப் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஐபிஎல் 2026-க்கான ஆரஞ்சு தொப்பி இப்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு சொந்தமானது. இதற்கிடையில், கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது ஐபிஎல் வாழ்க்கையிலேயே அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களில், கம்மின்ஸ் 3 டாட் பந்துகளை மட்டுமே வீசி 64 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ALSO READ: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!

எஸ்.ஆர்.ஹெச் வரலாறு படைக்குமா..?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 244 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணி இதற்கு முன்பும் 2026-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அதிகபட்ச ரன் சேஸிங் 246 ஆகும். இதை அவர்கள் கடந்த ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எட்டினர். புள்ளிவிவரங்களின்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் எலிமினேட்டர் போட்டியிலும் வெற்றி பெற முடியும். இதற்கு ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிய வேண்டும்.

Follow Us