IPL 2026 Schedule: ஐபிஎல் 2026 அட்டவணை அறிவிப்பை எப்போது, எங்கே பார்க்கலாம்? முழு விவரம் இதோ!
IPL 2026 Schedule Live Streaming: ஐபிஎல் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில், தேதி வருகின்ற 2026 மார்ச் 26ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பின்னர் இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. போட்டியின் இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 டி20 உலகக் கோப்பை முடிந்ததிலிருந்து, ஐபிஎல் 2026 (IPL 2026) அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்கான அட்டவணையை விரைவில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சமீபத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா வருகின்ற 2026 மார்ச் 12ம் தேதிக்குள் அட்டவணை வெளியிடப்படலாம் என்று கூறினார். இப்போது, அட்டவணை தொடர்பான ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டும் வெளியாகியுள்ளது. எனவே, ஐபிஎல் அட்டவணை அறிவிப்பை எப்போது, எங்கே, எப்படி நேரலையில் பார்க்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: முதல் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறதா சிஸ்கே? லீக்கான ஐபிஎல் 2026 லீக் அட்டவணை அப்டேட்!




கிரிக்பஸின் கூற்றுப்படி, 2026 ஐபிஎல் அட்டவணை இன்று அதாவது 2026 மார்ச் 11ம் தேதி வெளியிடப்படும். தற்போது, முதல் கட்டத்திற்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்படும் என்பதால், போட்டியின் 20 நாள் அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்படி, ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டார் வழியாக நேரடி ஒளிபரப்பு கிடைக்கும்.
ஐபிஎல் 2026 சீசன் எப்போது தொடங்குகிறது..?
The one we’ve all been waiting for 🤩
Stay tuned for the #TATAIPL 2026 schedule announcement ⌛ pic.twitter.com/3tUsftZUj7
— IndianPremierLeague (@IPL) March 11, 2026
சில நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில், தேதி வருகின்ற 2026 மார்ச் 26ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பின்னர் இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. போட்டியின் இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2026 மார்ச் 8ம் தேதி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நிறைவு விழாவிற்கு முன்னதாக ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டன. ஆனால், அது நடக்கவில்லை.
ALSO READ: ஐபிஎல் 2026ல் அட்டவணை எப்போது வெளியீடு? அப்டேட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்!
முதல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே?
முதல் போட்டி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கடந்த ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிகளின்படி, இந்த சீசனின் முதல் போட்டி நடப்பு சாம்பியனின் சொந்த ஸ்டேடியத்தில் நடைபெறும். எனவே, முதல் போட்டி ஆர்சிபியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.