AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா.. தாக்கு பிடிக்குமா ரஹானே படை..?

KKR vs SRH Match Prediction: ஐபிஎல் 2026-ன் 6வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி சேஸ் செய்யவே விரும்பும். இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த 5 டி20 போட்டிகளில், 3ல் சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

IPL 2026: சொந்த மண்ணில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா.. தாக்கு பிடிக்குமா ரஹானே படை..?
கொல்கத்தா - ஹைதராபாத்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Apr 2026 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் 2026ன் (IPL 2026) 6வது போட்டியானது, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 2ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். கடந்த ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மற்றொன்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (Sunrisers Hyderabad) வெற்றி பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. அதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 278 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், ஹென்ரிச் கிளாசன் வெறும் 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் 2026-ன் 6வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி சேஸ் செய்யவே விரும்பும். இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த 5 டி20 போட்டிகளில், 3ல் சேஸ் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடைபெறும் டி20 சர்வதேசப் போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் சுமார் 163 ரன்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சிக்கலில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.. விரைவில் ஒரு போட்டியில் விளையாட தடையா?

KKR vs SRH அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மொத்தமாக 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ: எனக்கு கிரிக்கெட்டில் நண்பர்கள் இல்லை.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!

கணிக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, பிளஸ்ஸிங் முசரபானி.

இம்பாக்ட் வீரர்: கார்த்திக் தியாகி

கணிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா.

இம்பாக்ட் வீரர்: டேவிட் பெய்ன்.

Follow Us