AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிக்கலில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.. விரைவில் ஒரு போட்டியில் விளையாட தடையா?

Punjab Kings Captain Shreyas Iyer: ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஐபிஎல் 2025 சீசனிலும், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக பிசிசிஐ-யால் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2026: சிக்கலில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.. விரைவில் ஒரு போட்டியில் விளையாட தடையா?
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Apr 2026 14:54 PM IST

ஐபிஎல் 2026-ன் (IPL 2026) 4வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று அதாவது 2026 மார்ச் 31ம் தேதி நடைபெற்றது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி (Punjab Kings) 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி 2ம் இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல்-ன் 19-வது சீசனை வெற்றியுடன் தொடங்கியது. இருப்பினும், போட்டியின் போது செய்த தவறுக்காக பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தோனியிடம் துளியும் பேசவில்லை.. ஷாக் கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிசிசிஐ ஏன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதித்தது?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”புதிய சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாடா ஐபிஎல் 2026 தொடரின் 4வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.22வது பிரிவின் கீழ், குறைந்தபட்ச ஓவர்-ரேட் மீறல்கள் தொடர்பான இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயரின் அணியின் முதல் மீறல் இதுவாகும். எனவே, ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்திருந்தது.

ALSO READ: எதையுமே மாற்றாத பஞ்சாப் அணி வெற்றி.. ஐபிஎல் புள்ளி அட்டவணை இதோ.. முதலிடத்தில் எந்த அணி?

2வது முறையாக அபராதம்:

ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஐபிஎல் 2025 சீசனிலும், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக பிசிசிஐ-யால் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை, அவருக்கு ரூ. 12 லட்சம் அபராதமும், இரண்டாவது முறை, ரூ. 24 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக, ஐபிஎல் 2024 சீசனில் தொடர்ச்சியாக 3 முறை ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாடத் தடை செய்யப்பட்டு, ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.

Follow Us