Arjun Tendulkar: எனக்கு கிரிக்கெட்டில் நண்பர்கள் இல்லை.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
Arjun Tendulkar on leaving Mumbai Indians: இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி, இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் லக்னோவில் இரவு 7 மணிக்கு மோதுகிறது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி, இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, அர்ஜூன் டெண்டுல்கர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிய தகவலை வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ALSO READ: இந்திய அணியில் மறுக்கப்படும் வாய்ப்பு.. தேர்வாளர்களை மறைமுகமாக சாடிய முகமது ஷமி!
கோவா அணிக்கு மாறியது ஏன்..?
மும்பை அணியில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருந்ததால், தனக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், அர்ஜுன் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவாவுக்குச் சென்றார், அங்கு அவர் ஓரளவு தான் யார் என்பதை நிரூபித்தார். சுபங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், “தனக்கு அதிக கிரிக்கெட் நண்பர்கள் இல்லை. களத்திற்கு வெளியே தனது நட்பு வட்டம் மிகவும் சிறியது. அதிகமான மக்களுடன் பழகுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை. மும்பையை விட்டு வெளியேறியது மிகவும் நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. விளையாடுவதற்கான கூடுதல் வாய்ப்புகளை பெறுவதற்காகவே கோவா அணிக்கு மாறினேன். மும்பையில் இடம் பிடிப்பது மிகவும் கடுமையாக இருக்கும், கோவா அணிக்கு மாறுவது ஒரு கிரிக்கெட் வீரராக தன்னை வளர்த்துக்கொள்ள உதவும் சிறந்த வாய்ப்புகளையும் அனுபவத்தையும் பெற உதவும்.




எந்தவொரு வீரருக்கும் சீரான ஆட்ட நேரம் மிகவும் முக்கியம். கோவாவுக்கு மாறுவதன் மூலம் அதிக பொறுப்புகளை ஏற்று தனது பன்முக திறன்களை மேம்படுத்திக்கொள்வதே நோக்கம்.” என்றார்.
யாரும் பெஞ்சில் உட்கார விரும்புவதில்லை..
தொடர்ந்து நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில போட்டிகளில் விளையாடி சிறப்பாக பந்துவீசினீர்கள். உங்கள் ஸ்விங் நன்றாக இருந்தது. எனவே, உங்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் உணர்ந்தீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த அர்ஜூன் டெண்டுல்கர், “ஒவ்வொரு வீரரும் அதிக வாய்ப்புகளை விரும்புகிறார்கள். யாரும் பெஞ்சில் உட்கார விரும்புவதில்லை. ஆனால், ஒரு வீரர் செய்ய வேண்டியதெல்லாம் கடினமாக உழைத்து, வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்தி கொள்வதுதான்” என்றார்.
ALSO READ: அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமா? வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு!
சுபங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் சச்சினை தவிர வேறு பார் தனது ஆதர்ச நாயகன் என்று கேட்கப்பட்டபோது பதிலளித்த அர்ஜூன் டெண்டுல்கர், “யுவராஜ் சிங்” என்று பதிலளித்தார். யுவராஜின் பந்துவீச்சும் அவருக்கு பிடிக்குமா என்று மேலும் கேட்கப்பட்டபோது அர்ஜூன் டெண்டுல்கர்,”யுவராஜ் சிங் ஒரு சுழற்பந்து வீச்சாளர், நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர்” என்று பதிலளித்தார்.