AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தொடர் வெற்றியை நோக்கி சிஎஸ்கே.. முதல் வெற்றியை தன்வசமாக்குமா கேகேஆர்.. யாருக்கு சாதகம்?

CSK vs KKR Win Prediction: ஐபிஎல் 2026-ன் 22-வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடந்த 5 டி20 போட்டிகளில், மூன்றில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

IPL 2026: தொடர் வெற்றியை நோக்கி சிஎஸ்கே.. முதல் வெற்றியை தன்வசமாக்குமா கேகேஆர்.. யாருக்கு சாதகம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Apr 2026 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் 2026-ன் (IPL 2026) 22-வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 14ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இந்த போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (Chennai Super Kings) ருதுராஜ் கெய்க்வாட்டும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அஜிங்க்யா ரஹானேவும் தலைமை தாங்குகின்றனர். கடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சதம் அடித்ததால், அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில், ருதுராஜ் கெய்க்வாட் தனது பார்முக்கு திரும்ப இந்த போட்டி திருப்பு முனையாக அமையலாம். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முழு போட்டி விவரத்தை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விராட் கோலிக்கு முன்பே ஓய்வு கொடுத்திருக்க வேண்டும்.. வர்ணனையாளரின் பேச்சால் எழுந்த சர்ச்சை!

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானம் பிட்ச் ரிப்போர்ட்:

ஐபிஎல் 2026-ன் 22-வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடந்த 5 டி20 போட்டிகளில், மூன்றில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடைபெறும் டி20 சர்வதேசப் போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் சுமார் 170 ரன்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு நடைபெற்ற கடைசிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 212 ரன்கள் என்ற இலக்கைப் பாதுகாத்து , 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடக்கூடிய லெவன்:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, சர்ஃபராஸ் கான், டெவால்ட் ப்ரூவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், கலீல் அகமது.

இம்பாக்ட் வீரர்: அகேல் ஹுசைன்.

ALSO READ: சிஎஸ்கே அட்டவணையில் திடீர் மாற்றம்.. சேப்பாக்கத்தில் இருந்து அகமதாபாத்திற்கு மாறும் போட்டி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆடக்கூடிய லெவன்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், நவ்தீப் சைனி, கார்த்திக் தியாகி.

இம்பாக்ட் வீரர்: வைபவ் அரோரா.

சிஎஸ்கே vs கேகேஆர் இன்றைய போட்டி கணிப்பு:

ஐபிஎல் 2026 சீசனின் 22வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Follow Us