AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: விரைவில் ஆரம்பமாகும் ஐபிஎல்.. வீரர்கள் இதை செய்ய பிசிசிஐ தடை..!

IPL 2026 New Restrictions: ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக பிசிசிஐ வீரர்கள் மற்றும் அணிகளுக்காக சில புதிய மற்றும் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. பயிற்சி முதல் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகை வரை அனைத்திற்கும் பிசிசிஐ கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது.

IPL 2026: விரைவில் ஆரம்பமாகும் ஐபிஎல்.. வீரர்கள் இதை செய்ய பிசிசிஐ தடை..!
ஐபிஎல் 2026 புதிய விதிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Mar 2026 16:01 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஐபிஎல் தொடங்குகிறது. இந்தநிலையில், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக பிசிசிஐ வீரர்கள் மற்றும் அணிகளுக்காக சில புதிய மற்றும் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. பயிற்சி முதல் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகை வரை அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பர்ப்பிள் மற்றும் ஆரஞ்சு நிற கேப்கள் தொடர்பாக ஒரு புதிய விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போட்டி முடிவுக்கு பிறகு நடைபெறும் பரிசளிப்பு விழாக்களின் போது வீரர்கள் கையில்லாத ஜெர்சிகளை அணிய இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் 2026-க்கு பொருந்தும் அனைத்து விதிகளின் பட்டியல் இதோ.

ALSO READ: ஐபிஎல் 2026-ல் அமல்படுத்தப்படவுள்ள 7 புதிய விதிகள் இவைதான்!

ஐபிஎல் 2026-இன் அனைத்து புதிய விதிகளின் பட்டியல்:

  • ஐபிஎல் 2026 சீசனில் திறந்த வலை பயிற்சிக்கு (Net Practice) தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு அணியும் இரண்டு நெட்களில் மட்டுமே பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • ஒரு அணி பயிற்சியை முன்கூட்டியே முடித்துவிட்டால், மற்ற அணியால் அதன் வலைகளில் பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படாது.
  • பயிற்சி நாட்களில், வீரர்கள் அணிப் பேருந்தில் மட்டுமே மைதானத்திற்கு வருவது கட்டாயமாகும். பயிற்சியின்போது குடும்பத்தினரிடம் தனியாக பயிற்சிக்கு வரக்கூடாது.
  • பயிற்சியின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடை மாற்றும் அறைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே உடை மாற்றும் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
  • குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால், தனி வாகனத்தில் மைதானத்திற்கு வந்து உபசரிப்புப் பகுதியில் அமரலாம்.
  • வீரர்கள் எல்.ஈ.டி பலகைகளை நோக்கி பந்தை அடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்.ஈ.டி பலகைகளுக்கு முன்னால் அமர்வதும் தடைசெய்யப்படும்.
  • ஆரஞ்சு கேப் அல்லது பர்ப்பிள் கேப் வைத்திருக்கும் எந்தவொரு வீரரும் முதலில் குறைந்தபட்சம் 2 ஓவர்களுக்கு அந்தத் தொப்பியை அணிய வேண்டியது கட்டாயம்.
  • போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாக்களில் தொளதொளப்பான தொப்பிகள், கை இல்லாத ஜெர்சிகள் மற்றும் செருப்புகளுக்கு ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது, அணிந்திருந்த உடைகளை போல் இருப்பது முக்கியம்.
  • போட்டி நாளன்று பிரதான சதுக்கத்தில் உடற்தகுதி சோதனை எதுவும் நடத்தக்கூடாது. விதிகளை மீறினால், முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் தண்டனை வழங்கப்படும்.

ALSO READ: 10வது ஓவருக்கு பிறகு பந்து மாற்றம்.. ஐபிஎல்லில் வரும் புதிய விதி.. யாருக்கு சாதகம்?

போட்டி நாள் நெறிமுறைகள்:

  • மருத்துவர் உட்பட 12 துணைப் பணியாளர்கள் மட்டுமே அணியுடன் இருப்பார்கள். மேலும், ஒவ்வொரு பணியாளரும் தங்களது அங்கீகார அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
  • எந்தவொரு வீரரும் தனது ஜெர்சி எண்ணை மாற்ற விரும்பினால், அவர் பிசிசிஐ-க்கு 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். போட்டி நாளில் திடீரென அணிய அனுமதிக்கப்படாது.

Follow Us